states

தீக்கதிர் விரைவு செய்திகள்

பாகிஸ்தானுடன் பேச முடியாது: அமித்ஷா

“காஷ்மீரில் உள்ள அரசியல்வாதிகள் சிலர், பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறி வருகிறார்கள். நாம் ஏன் பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்? நாம் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். காஷ்மீர்  மக்களிடம்தான் பேசுவோம். தீவிரவாதத்தை நரேந்திர மோடி அரசு ஒருபோதும் சகித்துக் கொள்ளாது. ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தை முழுமையாக துடைத்தெறியப்பட வேண்டும் என ஒன்றிய அரசு விரும்புகிறது. இந்தியாவின் மிகவும் அமைதியான இடமாக ஜம்மு காஷ்மீரை மாற்ற நாங்கள் விரும்புகிறோம்” என்று ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.

இலவச மின்சாரத்தைத் தடுக்க பாஜக சதி!

“ஆம் ஆத்மியின் இலவச மின்சார உத்தரவாதத்தை குஜராத் மக்கள் மிகவும் விரும்பு கின்றனர். அதனால்தான் தில்லியில் இலவச மின்சாரத்தை நிறுத்த பாஜக விரும்பு கிறது. தில்லி மக்களே எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் இலவச மின்சாரத்தை எந்த  சூழ்நிலையிலும் நிறுத்த விடமாட்டேன். குஜராத் மக்களுக்கும் நான் உங்களுக்கு உறுதி யளிக்கிறேன். குஜராத்தில் ஆம் ஆத்மி அரசாங்கம் அமைந்தால், அடுத்த ஆண்டு மார்ச் 1 முதல்  உங்களுக்கும் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்” என தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வால் பேசியுள்ளார்.

பாகிஸ்தான் செல்ல ஆர்ஜேடி எம்.பி.க்கு தடை!

பாகிஸ்தானின் லாகூரில்  நான்காவது அஸ்மா ஜஹாங்கிர் மாநாடு நடைபெற உள்ளது.  இம்மாதம் 23-ஆம்  தேதியன்று இந்த மாநாட்டில் ‘ஜனநாயக உரிமைகளை நிலை நிறுத்துவதில் அரசியல் கட்சிகளின் பங்கு’ தலைப்பில் ஒரு கருத்தரங்கு அமர்வு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும்படி, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநி லங்களவை உறுப்பினருமான மனோஜ் ஜாவுக்கு அஸ்மா ஜஹாங்கீர் அறக்கட்டளை, பாகிஸ்தான் பார் கவுன்சில், பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் மற்றும் ஏ.ஜி.எச்.எஸ். சட்ட உதவி பிரிவு ஆகியவை அழைப்பு விடுத்து இருந்தது. ஆனால் மனோஜ் ஜா பாகிஸ்தானுக்கு செல்ல  ஒன்றிய அரசு அனமதி மறுத்துள்ளது.

முலாயம் சிங் உடல் தொடர்ந்து கவலைக்கிடம்!

நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும்,  உ.பி. மாநில முன்னாள் முதல்வரு மான முலாயம் சிங்கிற்கு (82) அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில்  சிறப்பு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவரது உடல் தொடர்ந்து கவலைக்கிட மாக இருப்பதாகவும், சிறப்பு மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும்  மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

நிலைக்குழு தலைவரான கனிமொழி எம்.பி.

ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்துராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களை நிய மனம் செய்து ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில், மக்களவை எம்.பி.க்கள்  17 பேரும், மாநிலங்களவை எம்.பி.,க்கள் 10 பேரும் ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஊரக வளர்ச்சி  மற்றும் பஞ்சாயத்துராஜ் நிலைக்குழுவின் தலைவராக திமுக எம்.பி.  கனிமொழி நியமிக்கப் பட்டுள்ளார்.

மகாராஷ்டிர அரசு ரூ.100-க்கு தீபாவளி பரிசு!

மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் தீபாவளி பண்டிகையை ஒட்டி  1 கோடியே 70 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பை அளிக்க மாநில அரசு  ஆலோசித்து வந்தது. அதன்படி, அக்டோபர் 24-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள தீபாவளி பண்டிகையையொட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்கு “ஒரு கிலோ ரவை, நிலக்கடலை, சமையல் எண்ணெய், துவரம் பருப்பு” உள்ளிட்ட மளிகைப் பொருட்களை 100 ரூபாய்க்கு  வழங்க முடிவு செய்துள்ளது.

10 மாடுகளை கொன்ற புலி  பிடிப்பட்டது

மூணாறு, அக்.5-  கேரள மாநிலம் மூணா றில் உள்ள நயமக்காடு எஸ்  டேட் அருகே வனப்பகுதி யை விட்டு வெளியேறிய புலி ஒன்று கடந்த 2 தினங்களில் 10 மாடுகளை தாக்கி கொன்  றது. இதனை தொடர்ந்து  நயமக்காடு பகுதியில் புலி யை பிடிக்க 3 இடங்களில் வனத்துறையினர் கூண்டு அமைத்தனர். குறிப்பாக 5 மாடுகளை தாக்கி கொன்ற மாட்டுபட்டியில் பெரிய கூண்டு வைத்தனர்.  இதில் செவ்வாயன்று இரவு அந்த புலி கூண்டுக்குள் சிக்கியது. புலியை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு போய் விடுவதற்கு வனத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உத்தரகண்ட் விபத்தில்  25 பேர் பலி!

உத்தரகண்ட் மாநிலம், பவுரி  கர்வால் மாவட்டம் லால்தங் பகுதி யில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொள்வதற்காக 46 பேர்  பேருந்தில் சென்றுள்ளனர். இவர்  கள் திருமணம் முடிந்து செவ்வா யன்று இரவு சொந்த ஊருக்கு பேருந்தில் திரும்பியுள்ளனர். அப்போது, பேருந்து தூமகோட் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த  சம்பவத்தில் 25 பேர் பலியாகி யுள்ளனர். 21 பேர் உயிருடன் மீட்கப்  பட்டுள்ளனர்.

ஆற்றில் மூழ்கி பலியான 6 பேர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு

சென்னை,அக்.5- கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி பலியான 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா  ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித் துள்ளார்.இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- சுற்றுலாவிற்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்திருந்த தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி கிராமம்,  சிலுவைப்பட்டியைச் சேர்ந்த சார்லஸ் (38), பிருத்விராஜ் (36), தாவீதுராஜா (30),  பிரவீன்ராஜ் (19), ஈசாக் (19) மற்றும் செல்வன் அண்டோ கெர்மஸ் ரவி ஆகிய  ஆறுபேரும் அக்.3 அன்று கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றபோது பள்ளத் தில் விழுந்ததில் நீச்சல் தெரியாமல் நீரில்  மூழ்கி உயிரிழந்தனர். இந்த துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவரின் குடும்பத் தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை யும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் மூன்று இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறையில் முருகனுக்கு திடீர் உடல் நலக்குறைவு

வேலூர்,அக்.5- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற மு ருகன் 30 ஆண்டுகளுக்கு மேலாக  வேலூர் சிறையில் அடைக்கப்பட் டுள்ளார். அடிக்கடி உண்ணாநிலைப் போராட்டத்தில் முருகன் ஈடுபட்டு வருகிறார். கடந்த மாதம் தன் மீது  உள்ள வழக்கு ஒன்றை விரைந்து முடிக்க கோரி முருகன் உண்ணாநிலை மேற்கொண்டிருந்தார். இதனால் முருகனின் உடல்நிலை மோசமாகி உள்ளது. சிறையிலிருந்த முருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அவரை சிறையிலுள்ள மருத்துவமனையில் அனு மதித்தனர். அங்கு முருகனுக்கு 4 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. தொடர்ந்து  முருகன் உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

தொடங்கியது சீசன்: நீலகிரியில் குவியும் சுற்றுலாப்பயணிகள்

உதகை,அக்.5- தமிழ்நாடெங்கும் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டதைத் தொடர்ந்து, நீலகிரியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். நடப்பு அக்டோபர், வரும் நவம்பர்,  டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் தொடங்கும் இரண்டாவது சீசனுக்காக வும், மாநிலமெங்கும் பள்ளி காலாண்டுத்  தேர்வு விடுமுறையை யொட்டியும் ஏராள மான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இதன் ஒருபகுதியாக, குன்னூரில் உள்ள சிம்ஸ் பார்க், டால்பின் நோஸ், லேம்ஸ் ராக் போன்ற பகுதிகளில் சுற்று லாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. மேலும், இங்கு நிலவும் இதமான கால நிலை காரணமாகவும் கேத்தரின் நீர்வீழ்ச்சி, ஆதிவாசிகள் குடியிருப்பு வனவிலங்குகளையும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். மேலும், சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பால் டால்பின் நோஸ் செல்லும்  சாலைகளில் வாகனநெரிசல் ஏற்படுகி றது. இதன்காரணமாக இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணி வகுத்து நிற்பதனால், சுற்றுலாப் பயணி கள் வாகனங்களை நிறுத்திவிட்டு, பாதி யில் நடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, அங்குள்ள வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

‘இலவசப் பயணம் குறித்து தவறான செய்தி’

சென்னை, அக்.5- அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் செய்ய விரும்பாத பெண்கள் நடத்துநரிடம் பணம் கொடுத்து டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என்று வாய்மொழியாக நடத்துநர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, சமூக வலைதளங்களில் பரவிய செய்தி தவறானது என்று மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர்  சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சுங்கச்சாவடி ஊழியர்களின் போராட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி

சென்னை, அக்.5- கள்ளக்குறிச்சி மாவட்டம் செங்குறிச்சி  மற்றும் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை யில் இயங்கி வரும் சுங்கச் சாவடிகளில் ஆட்குறைப்பு நடவடிக்கையை சுங்கச்சா வடி நிர்வாகம் மேற்கொண் டது. இதற்கு எதிர்ப்பு தெரி வித்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது சுங்கச்சாவடியில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள், ஃபாஸ்டாக் தொழில்நுட்ப முறை ஆகியவை சேதப்படுத் தியதாக சுங்கச்சாவடி நிர்வாகம் தரப்பில் குற்றம் சாட்டப் பட்டது. இந்நிலையில், இரண்டு சுங்கச்சாவடிகளுக்கும் அதிரடிப்படை பாது காப்பு வழங்க உத்தரவிடக் கோரியும், சுங்கச்சாவடிகள் அமைந்துள்ள பரப்பளவில் 800 மீட்டர் சுற்றளவுக்கு போராட்டங்கள் நடத்த தடை விதிக்கக்கோரியும் திருச்சி சுங்கச்சாவடி நிர்வாகம் தரப்பில் சென்னை உயர்  நீதிமன்றத்தில் மனுத்தாக் கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக நீதிபதி சரவணன், காணொலி காட்சி வாயி லாக விசாரித்தார்.  இதையடுத்து, ஊழியர் கள் அமைதியான முறையில்  போராட்டத்தை நடத்தலாம் எனவும் வாகன போக்குவரத் துக்கு எந்த வித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது எனவும் உத்தரவிட்டார். மேலும் பாது காப்பு அளிப்பதில் தற்போ தைய நிலையே தொடர  வேண்டுமென காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அக்டோபர் 10 ஆம் தேதிக்கு  தள்ளி வைத்தார்.

சமஸ்கிருதத்தில் கிரிக்கெட் வர்ணனை : மோடி புளகாங்கிதம்!

புதுதில்லி, அக். 5 - சமஸ்கிருத மொழியிலான கிரிக்கெட் வர்ணனையால் பிரதமர்  நரேந்திர மோடி புளகாங்கிதம் அடைந் துள்ளார். இதற்காக மோடி பாராட்டும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பல்வேறு மொழி களைப் பேசும் மக்களிடம், சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழி யைத் திணிக்கும் முயற்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது. எனி னும், நரேந்திர மோடி தலைமை யிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபின் இது அதிகரித்து விட்டது. இந்த மொழிகளின் வளர்ச்சிக்காக பலநூறு கோடி ரூபாய் நிதியும் அள்ளி இறைக்கப்பட்டு வருகிறது. 2018 முதல் 2020 வரையிலான மூன்று ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்,  ஒடியா ஆகிய 5 செம்மொழிகளின் வளர்ச்சிக்கு மொத்தமாகவே ரூ. 22 கோடிதான் நிதி ஒதுக்கப்பட்டது.  ஆனால், அதே மூன்றாண்டு களில் சமஸ்கிருதத்திற்கு மட்டும் ரூ. 643 கோடியே 84 லட்சத்தை மோடி அரசு ஒதுக்கியது. பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில்  அமைந்துள்ள விமான நிலையத்தில் கூட சமஸ்கிருதத்தில் தற்போது அறிவிப்புகள் வெளி யிடப்படுகின்றன.  வாரணாசியில் நடைபெற்ற கிரிக்கெட் விளையாட்டின் போது, சமஸ்கிருதத்தில் வர்ணனை செய்யப்பட்டது. இதற்கு தமது வானொலி நிகழ்ச்சியான ‘மன்கி பாத்’ மூலம் பிரதமர் மோடி ஏற்கெ னவே வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், கர்நாடக மாநி லம் பெங்களூருவிலுள்ள குடி யிருப்பு ஒன்றில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவது சமஸ் கிருதத்தில் வர்ணனை செய்யப் பட்டது, பிரதமர் மோடியை புளகாங் கிதம் அடையச் செய்துள்ளது.  மொத்தம் 45 விநாடிகள் மட்டுமே கொண்ட இந்த வர்ணனை  தொடர்பான வீடியோ பதிவு ‘சமஸ்கிருதம் மற்றும் கிரிக்கெட்’ என்ற தலைப்பில் சமூகவலை தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்ட நிலையில், “இதனைக் கண்டு மனம் மகிழ்ச்சி அடைகிறது..  இந்த முயற்சியை மேற்கொண்ட வர்களுக்கு வாழ்த்துக்கள்” என்று பிரதமர் மோடி டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அநீதி களையப்பட வேண்டும்!

பொகோடா, அக்.5- பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தரும் நாடுகள் பட்டியலில் இருந்து கியூபாவை நீக்குமாறு அமெரிக்காவை கொலம்பியா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் அன்டோனி பிளின்கன் கொலம்பியாவுக்கு வந்துள்ளார். இடதுசாரிக் கொள்கைகளை முன்னிறுத்தித் தேர்தலில் வெற்றி பெற்ற கொலம்பியா ஜனாதிபதி குஸ்தவோ பெட்ரோவை அவர் சந்தித்துப் பேசினார்.  அப்போது, அமெரிக்கா உருவாக்கியுள்ள பயங்கரவாத ஆதரவு அரசுகள் பட்டியலில் கியூபாவின் பெயர் இடம் பெறக்கூடாது என்றும், அதை நீக்கி விடுங்கள் என்றும் பெட்ரோ வலியுறுத்தியிருக்கிறார். இது குறித்து விளக்கிய அவர், “கொலம்பிய அரசுக்கும், அரசுக்கு எதிராக இயங்கி வரும் புரட்சிகரக் குழுக்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்துமாறு கியூபாவை முந்தைய ஜனாதிபதி ஜூவான் மானுவல் சாண்டோஸ் கேட்டுக் கொண்டார். பேச்சுவார்த்தைகளும் நடந்தன. அப்போது பாரக் ஒபாமா தலைமையிலான அரசு அமெரிக்காவில் இருந்தது. ஆனால் அதன்பிறகு கொலம்பிய ஜனாதிபதியாகப் பதவியேற்ற இவான் டியூக், கியூபாவைப் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தரும் அரசுகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றார். அப்போது டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு இருந்தது” என்றார். மேலும் பேசிய அவர், “இது கியூபாவுக்கு இழைக்கப்பட்ட அநீதி. இது களையப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
 

 

;