states

ஜார்க்கண்ட் காவல் துணை ஆணையர் மீது தில்லி போலீசார் தேசத் துரோக வழக்கு!

புதுதில்லி, செப். 5 - பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மீது ஜார்க்கண்ட் காவல்துறையினர் எப்ஐஆர் பதிவு செய்திருந்த நிலையில், ஜார்க்கண்ட் காவல்  துணை ஆணையர் மீது தில்லி காவல்துறையினர் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, அவரது இரண்டு மகன்கள் மற்றும் மனோஜ் திவாரி எம்.பி. உள்ளிட்டோர் கடந்த 31-ஆம் தேதி மாலையில், ஜார்க்கண்ட்டிலுள்ள தியோகர் விமான நிலையத்திற்குச் சென்றுள்ளனர். அவர்கள் தனி விமானம் வேண்டும் என கோரியுள்ளனர். தியோகர் விமான நிலை யத்தில் இரவு நேர விமான சேவை இல்லை என்பதால், தனி விமானத்தை இயக்க முடியாது என விமானிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விமானிகள் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் ஆலோசித்துக் கொண்டிருந்தபோது, பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே உள்ளிட்டோர் அத்து மீறி கட்டுப்பாட்டு அறைக்குள் நுழைந்து, விமானி களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். நீண்ட வாக்குவாதத்திற்குப் பிறகு, அவர்களது தனி விமானத்தை இயக்க அனுமதி அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

எனினும் விமான நிலையத்தின் பாதுகாக்கப் பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக, தியோ கர் விமான நிலையத்தின் ஒட்டுமொத்த பாது காப்புப் பொறுப்பாளரான டிஎஸ்பி சுமன் ஆனந்த், குந்தா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, “நான் சென்று கொண்டிருந்த போது, ஜார்க்கண்ட் காவல்துறை மற்றும் (மாநில  அரசு) ஊழியர்கள் என்னை தடுத்து நிறுத்தி, செருப்புகளை ஏந்தியபடி என்னை நோக்கி வந்தனர். எனது இரண்டு மகன்களையும் அதிகார துஷ்பிரயோகம் செய்து, கொலை மிரட்டல் விடுத்தனர். தியோகர் துணை ஆணையரின் உத்தர வில் அவர்கள் எனது பணியைத் தடுத்தனர்” என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே அளித்த புகாரின் பேரில், ஜார்க்கண்ட் காவல் துணையர் மஞ்சுநாத் பஜந்த்ரி உள்ளிட்ட அதிகாரிகள் மீது ஐபிசி பிரிவு 124A (தேசத்துரோகம்), 353, 448, 201, 506, 120B மற்றும் அதிகாரிகள் ரகசியச் சட்டங்களின் கீழ் தில்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

;