திருப்பூர், ஆக.28- தமிழ்நாடு அரசு வெளி யிட்ட உள்ளாட்சி ஊழியர் களுக்கான குறைந்தபட்ச ஊதிய அரசாணைக்கு சென் னை உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில், மாவட்டச் செயலா ளர் கே.ரங்கராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கில், கடந்த குறைந்தபட்ச ஊதிய அரசாணை (2டி)-62, நாள்:11.10.2017-ல் வழங்கிய அகவிலைப்படி தொகை யை விட புள்ளிக்கு ரூ.6.25 பைசா குறைக்கப்பட்டுள் ளது. அதோடு, அடிப்படை ஊதியத்தை உயர்த்தாமல், ஊராட்சிகளில் அடிப்படை ஊதியத்தையும் குறைத்து ள்ளனர். இது மாநகராட்சி, நகரா ட்சி, பேரூராட்சி, ஊராட்சி களில் வேலை செய்யும் லட்சக் கணக்கான ஒப்பந்த தூய் மைப் பணியாளர்கள், குடிநீர் பணியாளர்கள், குப்பை வாகன ஓட்டுநர்கள், டிபிசி ஊழியர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி ஊழியர்களை கடுமையாக பாதிக்கும். எனவே, அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், வழக்கை விசாரணைக்கு ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் திங்களன்று தமிழக அரசின் அரசாணைக்கு தடை உத்த ரவு பிறப்பித்துள்ளது.