states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கடந்த ஜூன் மாதம் ஒடிசா மாநிலத்தின் பால சூர் அருகே 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 295 பேர் உயிரிழந்த னர். 267 உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு  உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் 28 பேரின் உடல்களுக்கு உறவினர்கள்  யாரும் உரிமை கோராமல் இருந்த நிலையில்,  28 உடல்களையும் புவனேஸ்வர் மாநகராட்சி  புதனன்று அடக்கம் செய்தது. உயிரிழந்தவர்களின் தகவல்கள் புவனேஸ்வர் மாநகராட்சியிடம் இருக்கும் என்பதால் பிற்காலத்தில் உயிரிழந்த வர்களின் உறவினர்கள் யாரேனும் தகவல்கள் கேட்டு வந்தால் அவர்களுக்கு உரிய ஆவணங்கள் வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறி வித்துள்ளது.

பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் அக்டோ பர் 14 அன்று நடைபெறவுள்ள இந்தியா- பாகிஸ்தான் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி யின் போலி டிக்கெட்டுகளை விற்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு வழக்கில் சிறை யில் (நீதிமன்றக்  காவல்) உள்ள நிலையில், அவர்  மீது நிலுவையில் உள்ள அமராவதி ரிங்ரோடு வழக்கு மற்றும் அங்ககல்லூ கலவர வழக்கில் ஆந்திர உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. 

ஹரியானா மாநிலம் பிவானியில் புத னன்று அதிகாலை சரக்கு லாரியும் காரும்  நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோ ரத்தில் நவம்பர் 7 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், ஆளும் எம்என்எப் கட்சியின் மூத்த தலைவரும், சட்டசபை சபாநாய கருமான லால்ரின்லியானா சைலோ புதனன்று சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் சேரப் போவதாக அறிவித்துள்ளார்.

பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தின் பரேலி  நகரின் சிபி கஞ்ச் பகுதியில் பாலியல் துன்புறுத்தலை எதிர்த்ததற்காக 17 வயது சிறுமி யை 3 பேர் கொண்ட கும்பல் ரயில் முன் தூக்கி  எறிந்தது. இதில் சிறுமியின் கை, கால்கள்  நசுங்கின. ஆபத்தான நிலையில் மருத்துவமனை யில் சிறுமி போராடிக் கொண்டு இருக்கிறார்.

மத்திய கூட்டுறவு வங்கியின் இயக்குநர் பதவி யை மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்  பவார் திடீரென ராஜினாமா செய்தார்.