states

தீக்கதிர் விரைவு செய்திகள்

மேட்டூரிலிருந்து நீர்திறப்பு  அதிகரிப்பு!

காவிரியாற்றில் நீர் வரத்து தொடர்ந்து உயர்ந்து வருவதால் மேட்டூர்  அணையிலிருந்து நீர் திறப்பு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் தற்போதும் 65.80 அடியாகவே உள்ளது.

அண்ணாமலை நடைபயணம் எடப்பாடி நிராகரிப்பு

பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, இரா மேஸ்வரத்தில் வெள்ளிக்கி ழமையன்று துவங்கும் நடைபயணத்திற்கு வரு மாறு, அதிமுக பொதுச்செய லாளர் எடப்பாடி பழனி சாமிக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்த நிலையில், அண்ணாமலையின் அழைப்பை எடப்பாடி பழனி சாமி நிராகரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.

கல்லெறிகளால்  ரூ. 55.60 லட்சத்தை  இழந்த ‘வந்தே பாரத்’

“வந்தே பாரத்’ ரயில்கள் மீதான கல்வீச்சு சம்பவங் களால் ரூ. 55.60 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது; இது தொடர்பாக 151 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று மக்களவையில் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள் ளார்.

பிஎஸ்என்எல் சாதனை!

பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு சேவையில் 2022 ஏப்  ரல் முதல் 2023 மார்ச் வரை 1  கோடியே 37 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் இணைந் துள்ளதாகவும், குறிப்பாக, கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை யிலான காலத்தில் மட்டும்  31.46 லட்சம் இணைந்துள்ள தாகவும் தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவை முந்தவில்லை!

உலக மக்கள்தொகை அறிக்கை 2022-இன் படி,  2023 ஜூலை 1 வரை சீனாவின்  மொத்த மக்கள் தொகை 142  கோடியே 56 லட்சம். இந்தியா வின் மக்கள் தொகை 139  கோடியே 23 லட்சம் என ஒன் றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்தராய் தெரிவித்துள்ளார்.

80 பொறியியல் கல்லூரிகளுக்கு தொடர் அங்கீகாரம் நிறுத்திவைப்பு

சென்னை, ஜூலை 27-  போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதால் தமிழ்நாட்டில் 80 பொறியியல் கல்லூரிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 80 பொறியியல் கல்லூரிகளை நேரில் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ள அண்ணா பல்கலைக்கழகம், உள்கட்டமைப்பு வசதி சரியில்லாத கல்லூரிகளில் உள்ள மாணவர்களை வேறு கல்லூரிகளுக்கு மாற்றவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், உள்கட்டமைப்பு வசதி சரியில்லாத கல்லூரிகள்  விரைந்து அவற்றை சரி செய்து கொள்ளுமாறு அண்ணா பல்கலைக்கழகம் அறிவுரை வழங்கியுள்ளது.

ஞாயிறன்றும் ரேசன் கடை செயல்படும்

சென்னை,ஜூலை 27- தமிழ்நாட்டில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 30) அனைத்து ரேசன் கடைகள் செயல்படும் என்று உணவுப்  பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜூன் 24 அன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர்  அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக இந்த முகாமானது வருகின்ற ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை 20,765 நியாய விலைக் கடைகளில் நடைபெறுகின்றன. இந்நிலையில், மகளிர் உரிமைத் திட்ட விண்ணப் பங்களைப் பதிவு செய்யும் பணிக்கு வருகின்ற ஞாயிற்றுக் கிழமை (ஜூலை 30) அனைத்து நியாய விலைக் கடைகள்  செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பணி நாளுக்கு ஈடாக ஆகஸ்ட் 26-ஆம் தேதி விடுமுறை நாளாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கையொப்பமிட   பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

சென்னை, ஜூலை 27- பள்ளிக் கல்வித் துறையில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தமிழில் கையொப்ப மிட வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து அலுவலகங்க ளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், டிபிஐ வளாகம் தொடங்கி கடைநிலை அலுவலகம் வரை உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் வருகைப் பதிவு, ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தும் கண்டிப்பாக தமிழிலேயே கையொப்பமிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதற்கான அரசாணை கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில், தற்போது பள்ளிகளில் உள்ள ஆவணங்கள், வருகைப்பதிவு என அனைத்திலுமே மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் இனி தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதை அனைத்து பள்ளிகளிலும் விரைவாக கடைப் பிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மாணவர்க ளிடம் தமிழை வளர்ப்பதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ள தாகக் கூறப்படுகிறது.

அமலாக்கத்துறை சோதனை

சென்னை,ஜூலை 27- சென்னையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தொடர்புடைய 3 இடங்களில் வியாழனன்று அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.   சென்னை பெரியமேடு பேரக்ஸ் சாலையிலுள்ள  பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவர் இஸ்மாயில் அஸ்கர் அலுவலகத்திலும், புரசைவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திலும் சோதனை நடைபெற்றது.

உலகச் செய்திகள்

அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதல்களில் மட்டும் நடப்பாண்டில் 42 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பாலஸ்தீனத்தில் இயங்கி வரும் முட்டி என்ற புள்ளிவிபர மையம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் தனது தாக்குதல்களை இஸ்ரேல் பெரும் அளவில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த சில ஆண்டுகளாகவே ஜப்பானின் பொருளாதாரம் சரிவை சந்தித்து வந்தது. கொரோனா பாதிப்பு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அந்த சரிவுகளில் இருந்து சராசரி வேகத்தில் பொருளாதாரம் மீண்டு வருவதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்திற்கான பொருளாதார வளர்ச்சியை இதற்கு எடுத்துக்காட்டாக சுட்டிக்காட்டுகிறார்கள்.

தனியார் ஜெட் விமானங்கள் மீது சூப்பர் வரி போடுமாறு  ஸ்காட்லாந்தின் பசுமைக் கட்சியினர் வலியுறுத்தி யுள்ளனர். ஸ்காட்லாந்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் ஜெட் விமானங்கள் இயங்கி வருகின்றன. இந்த விமானங்கள் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கின்றன என்பதால் இந்த வரி போடுவதற்கான கோரிக்கை எழுந்திருக்கிறது.