புதுக்கோட்டை, ஜூலை 4- புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் பட்டியல் சமூக குடியிருப்பில் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில், தொட்டியில் கலக் கப்பட்ட மனிதக் கழிவின் மரபணுவுடன், சந் தேகப்படும் படியாக உள்ளோரின் மரபணு வை ஒப்பிட்டுப் பார்க்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்தனர். இதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 11 பேருக்கு மரபணு பரிசோதனை நடத்திட சிபிசிஐடி போலீசார் நீதிமன்ற அனு மதியும் பெற்றனர். ஆனால், இதில் 3 பேர் மட்டுமே ரத்த மாதிரிகளைக் கொடுத்துச் சென்றனர். 8 பேர் வராமல் மதுரை உயர்நீதி மன்றத்தை அணுகினர். அவர்களின் தரப்பை விசாரித்த உயர்நீதி மன்றம், குறிப்பிட்ட வழக்கை நடத்திவரும் விசாரணை நீதிமன்றம் அந்த 8 பேரின் கருத் தைக் கேட்டுப் பதிவு செய்து, மேல்நட வடிக்கை குறித்து உத்தரவிடலாம் என தீர்ப்ப ளித்தது. இதைத் தொடர்ந்து ஜூலை 1 ஆம் தேதி மாவட்ட எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் 8 பேரும் ஆஜராயினர். இவர்கள், தங்களுக்கு மர பணு பரிசோதனை நடத்தக் கூடாது என மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து தீர்ப்பை நீதிபதி எஸ்.ஜெயந்தி ஜூலை 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். இதன்படி, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜ ராகியிருந்தனர். அப்போது ஜூலை 5 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆஜராகி 8 பேரும் மர பணு பரிசோதனைக்கு ரத்த மாதிரிகளைத் தர வேண்டும் என நீதிபதி எஸ்.ஜெயந்தி உத்தர விட்டார்.