states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ஆவின் பால்: 24 மணி நேரமும்  புகார் தெரிவிக்கும் வசதி

சென்னை, செப்.9- பால் வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் தலைமையில் சென்னை ஆவின் தலைமை அலுவலகத்தில் ஆலோச னைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் கூறியதாவது:- எதிர்வரும் மழைக்காலம், பண்டி கை நாட்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அனைத்து இடங்களிலும் பால் தங்கு தடையின்றி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். கூடுதல் வாக னங்கள் மூலமாக உடனுக்குடன் பால்  விநியோகிக்க வேண்டும். பால் விற்பனை மையங்கள், பாலகங்கள் ஆகியவற்றுக்கு அதிகாரிகள் அடிக்கடி சென்று ஆய்வு செய்து குறைகள் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும். பால் விநியோகம் உள்ளிட்ட கூடுதல் தகவல்களைப் பெற 18004253300 என்ற கைப்பேசி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய ஆவினின்  முகநூல், டுவிட்டர், இன்ஸ் டாகிராம் ஆகிய சமூக வலைத் தளங்களிலும் பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

4 நாட்கள் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு

சென்னை,செப்.9- தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு பர வலாக மழையும், ஒரு சில இடங்க ளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு:- ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக செப்டம்பர் 10 ஆம் தேதி வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான பெய்யும். செப். 11 முதல் 14 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளது.

 தக்காளி விலை குறைந்தது

சென்னை,செப்.9- சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நா டகா மாநிலங்களிலிருந்து தினசரி தக்காளி விற்பனைக்கு வருகிறது.கடந்த மாதம் இறுதிவரை மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கும் குறைவாகவே விற்கப்பட் டது.கடந்த வாரம்ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.  2 நாட்களாக தக்காளி வரத்து  அதிகரித்து உள்ளதால் விலை சற்று குறைந்துள்ளது.

 

 

 

;