states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

உலகச் செய்திகள்

  1. 2024 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக எல் சால்வடாரின் தற்போதைய ஜனாதிபதி நாயிப் புகேலே அறிவித்துள்ளார். 5 ஆண்டுகள் ஜனாதிபதியாக இருப்பவர், மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட பத்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்ற சட்டம் முன்பு இருந்தது. தற்போது அது மாற்றப்பட்டு, உடனடியாக அடுத்த தேர்தலில் போட்டியிட முடியும் என்ற அனுமதி தரப்பட்டுள்ளது. 
  2. கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், வேட்டைத் துப்பாக்கிகளை ஏந்திக் கொண்டு வங்கிகளுக்குள் புகுந்து பணத்தைக் கேட்கும் சம்பவம் லெபனானில் நடந்துள்ளது. தங்கள் பணத்தைப் போட்டி ருந்த வங்கிகளுக்குள் இவர்கள் புகுந்து பணம் கேட்டது பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் நான்கு வங்கிக் கிளைகளில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்க வரும் திங்கட்கிழமையில் இருந்து அடுத்த மூன்று நாட்களுக்கு வங்கிகள் செயல் படாது என்று லெபனான் வங்கி கள் சங்கம் அறிவித்துள்ளது. 
  3. ஐரோப்பிய நாடுகளில் நிலவும் கடுமையான வெப்பம் மரணங்களின் எண்ணிக்கையை அதிகப் படுத்தியுள்ளது. 2021 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஜூலையில் 16 விழுக்காடு அதிகமான மரணங்கள் நிகழ்ந் துள்ளன. ஐரோப்பியக் கண்டத் தின் சில பகுதிகளில் கடுமை யான அனல் காற்றுடன் கூடிய வெப்பம் நிலவுகிறது. ஸ்பெயின், போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகளில் நெருப்பு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இதுவரை காணாத வெப்பத்தை ஐரோப்பிய நாடுகள் சந்தித்துக் கொண்டிருக்கின்றன.
;