77ஆவது சுதந்திர தின விழா ஆக.15 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தேசியக் கொடியையும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கட்சியின் செங்கொடியையும் ஏற்றினர். இந்நிகழ்ச்சியில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர்கள் பா. ஜான்சிராணி, வெ.ராஜசேகரன், இரா. சிந்தன், ஆர். சுதிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
77வது சுதந்திர தினமான ஆக.15 அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.