states

வெள்ளப் பெருக்கால் கடலில் கலக்கும் 500 கன அடி வைகை தண்ணீர்

இராமநாதபுரம், செப்.4- ராமநாதபுரம் வைகை ஆற்றில் வெள்ளப்  பெருக்கு ஏற்பட்டதால் 500 கன அடிக்கும் மேற்பட்ட தண்ணீர் கடலுக்குச் செல்லும் நிலை உள்ளது என விவசாயிகள் தெரி வித்தனர். இராமநாதபுரம் மாவட்டப் பாசனத்துக்கு வைகை அணையில் இருந்து சில நாட்க ளுக்கு முன்பு 2,000 கனஅடி தண்ணீர் திறக்கப்  பட்டது. இத்துடன் மதுரை பகுதிகளில் பெய்த  மழை நீரும் சேர்ந்தது. இதையடுத்து இராம நாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் மதகு அணைக்கு 4,500 கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்தது. இத்தண்ணீரை பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து இராமநாதபுரம் மாவட்ட  பாசனக் கண்மாய்களுக்கு வைகை வலது,  இடது பிரதானக் கால்வாய்கள், கூத்தாங்  கால்வாய், பரளையாறு, களரி கால்வாய், கீழ நாட்டார் கால்வாய் மற்றும் வைகை யாறு மூலம் இராமநாதபுரம் பெரிய கண்மாய் ஆகியவற்றுக்கு பொதுப்பணித் துறையினர் தண்ணீர் அனுப்பி வருகின்றனர். புல்லங்குடி அணைக்கட்டில் இருந்து  புல்லங்குடி, சித்தார் கோட்டை, தேர்போகி,  அத்தியூத்து கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது. இக்கண்மாய்களுக்கு சென்றது போக, மீதி சுமார் 500 கன அடி நீர் கடலுக்குச் செல்கிறது. புல்லங்குடி அணைக்கட்டுக்கு தண்ணீர் அதிகளவில் சென்றதால் தொருவளூர் கால்  வாயில் உடைப்பு ஏற்பட்டது. இதை பொதுப்  பணித் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் சரி செய்தனர். மேலும் புல்லங்குடியில் உள்ள செங்கல் சூளைகளுக்குள் தண்ணீர் சென்றதால், அங்கிருந்து தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேறினர். மாவட்டத்தில் பல கண்மாய்  கள் நிரம்பாததால் அந்த கண்மாய்களை நிரப்ப பொதுப்பணித் துறையினர் நடவ டிக்கை எடுக்க வேண்டும். கடலுக்கு தண்  ணீரை திருப்பிவிடுவதை நிறுத்த வேண்டும்  என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

;