states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. பேரணியில் நடந்த துப்  பாக்கிச்சூட்டில் எனது வலது காலில் 3 குண்டு கள் பாய்ந்து, இடது காலி லும் சில துண்டுகள் இருந்  தன என துப்பாக்கிச்சூட் டில் காயமடைந்த பாகிஸ் தான் முன்னாள் பிரதமர்  இம்ரான் கான் கூறியுள்ளார்.
  2. “ஒவ்வொரு மாநிலத்தி லும் ஒவ்வொரு கலாச்சா ரம் கொண்ட இந்தியா வில் குழந்தைகள் எந்த  மொழியில் கற்க வேண்  டும், எந்த பாடத் திட்டத் தில் படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய  மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது” என கல்வியை மாநில பட்டிய லில் இருந்து பொதுப்பட் டியலுக்கு மாற்றி நிறை வேற்றப்பட்ட அரசியல் சாசன திருத்தத்தை ரத்து  செய்யக் கோரி திமுக  எம்எல்ஏ எழிலன் தொட ர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜ ரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார்.
  3. ஜே.கே.பி.எஸ்.ஐ (ஜம்மு  காஷ்மீர் போலீஸ்) ஆள்  சேர்ப்பு மோசடி தொடர் பான விவகாரத்தில் ஜம்மு, பதான்கோட், ரேவாரி, கர்  னால் உள்ளிட்ட 7 இடங்க ளில் சிபிஐ சோதனை நடத்தியது.
  4. கேஜிஎஃப் -2 திரைப்  படத்தின் ஒலிப்பதிவு களை சட்டவிரோதமாக பயன்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சி மற்றும் ஒற்றுமை யாத்திரை டுவிட்டர் கணக்குகளை தற்காலிகமாக முடக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், உத்தரவை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர்நீதி மன்றத்தில் காங்கிரஸ் கட்சி ரிட் மனு தாக்கல் செய்ய உள்ளது.
  5. மக்கள் மது அருந்தலாம்; புகையிலை பயன்படுத்த லாம்; போதை பொருட் களை பயன்படுத்தலாம்; ஆனால் தண்ணீரைச் சேமிக்க வேண்டும் என்ற பாஜக எம்.பி. ஜனார்த்தன மிஸ்ராவின் பேச்சு சர்ச்  சையை ஏற்படுத்தியுள்ளது.
  6. சீக்கிய மதத்தில் திருமணத் திற்கு சட்டப்பூர்வ அங்  கீகாரம் அளிக்கும் “ஆனந்த் திருமணச் சட்டம்” நடை முறைப் படுத்தப்படும் என பஞ்சாப் முதல்வர் பக வந்த் மான் தெரிவித்துள் ளார்.
  7. “கூட்டுறவு வங்கி லிமி டெட்” என்ற பெயரில் சென்னையை தலைமை யிடமாக கொண்டு மதுரை, நாமக்கல், ஈரோடு உள் ளிட்ட 9 மாவட்டங்களில் போலி வங்கி நடத்திய கும்பல் கைது செய்யப் பட்டுள்ளதாக சென்னை போலீஸ் ஆணையர் சங்கர் ஜுவால் தகவல்.
  8. பள்ளி வளாகத்தை தவிர்த்து வேறு இடங்க ளில் குழந்தைகள் நல  காப்பகம் மற்றும் அலு வலகம் அமைக்கக் கூடாதா என நாகர்கோவில் எஸ்எல்பி பெண்கள் பள்ளி மைதானத்தில் குழந்தைகள் நல காப்பக அலுவலகம் கட்டுவதற்கு தடை கோரிய வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 
  9. சர்வதேச உறவுகளை மேம்படுத்தும் வகையில், பிரிக்ஸ் பொருளாதாரக் குழுவில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று அல்ஜீரியா விண்ணப்பம் செய்துள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ், சர்வதேச அளவில் மிக முக்கியமான அமைப்பாக உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து இதற்கான பணிகளைச் செய்து வந்த அல்ஜீரியா, தற்போது அதிகாரப்பூர்வமாகத் தனது விண்ணப்பத்தை அளித்திருக்கிறது.
  10. தீவிரவாத அமைப்புகளை எதிர்கொள்வதில் பெரும் வெற்றியை சிரியா ஈட்டியுள்ள நிலையில், உள்நாட்டுப் போரின்போது நாட்டை விட்டு வெளியேறியவர்கள் திரும்புவது அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு முறை லெபனானில் இருந்து சிரிய மக்கள் திரும்பினர். லெபனானின் பேகா பள்ளத்தாக்கில் இருந்து சிரியாவின் மேற்குப் பகுதியான கலாமோன் பகுதிக்கு 330 சிரிய மக்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இதேபோன்று கடந்த வாரத்திலும் ஒரு குழுவினர் நாடு திரும்பினர்.
  11. ஐக்கிய நாடுகள் சபையின் பணிகளின் நோக்கங்களுக்கு எப்போதுமே உறுதுணையாகவும், கூடுதல் பங்களிப்பை ஐ.நா.வின் பொது அவை செலுத்த வேண்டும் என்பதற்காகவும் சீனா எப்போதுமே முழுமையான ஆதரவைத் தந்து வந்துள்ளது என்று சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார். ஐ.நா.வின் பொது அவைத்தலைவர் சபா கோரோசியுடன் காணொலி வாயிலாகப் பேசுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.