states

img

ஜம்மு-காஷ்மீரில் அரசு ஊழியர்கள் மூலம் பாஜக தேர்தல் முறைகேடு? அரசு ஊழியர் டிஸ்மிஸ்; 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்

இமயமலைச் சாரலில் உள்ள ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிர தேசத்தில் உள்ள 5 மக்களவை தொகுதிகளுக்கும் 5 கட்டமாக தேர்தல்  அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒரு கட்  டத்திற்கு ஒரு தொகுதி என திங்க ளன்று நடைபெற்ற ஐந்தாவது கட் டத்தில் ஜம்மு&காஷ்மீரில் உள்ள 5  தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தல்  நிறைவு பெற்றது.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி அரசியல் நடவடிக்கை யில் ஈடுபட்ட 5 அரசு ஊழியர்கள் மீது  ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாக மாநில தேர்தல் ஆணைய செய்தி  தொடர்பாளர் தகவல் தெரிவித்துள் ளார். இதுதொடர்பாக அவர் மேலும்  கூறுகையில், “தேர்தல் நடத்தை விதி களை மீறி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்ட நிலையில் 5 ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் 4 அரசு  ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட் டுள்ளனர். ஒரு அரசு ஊழியர் தேர்தல்  சேவையில் இருந்தே விடுவிக்கப்பட் டுள்ளார். மேலும் 34 ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது” எனக் கூறியுள்ளார்.

பாஜக மீது சந்தேகம்

அரசியல் நடவடிக்கைகளில் ஈடு பட்டதன் காரணமாகவே ஒழுங்கு நட வடிக்கை எடுக்கப்பட்டதாக மாநில தேர்  தல் ஆணையம் கூறியுள்ள நிலையில்,  ஒழுங்கு நடவடிக்கை உத்தரவை பெற்ற  அரசு ஊழியர்கள் எந்தக் கட்சிக்கு ஆத ரவாக செயல்பட்டார்கள் என்பதை மாநில தேர்தல் ஆணையம் கூறவில்லை.  ஆனால் 18ஆவது மக்களவைத் தேர்த லில் தோல்வி பயத்தில் உள்ள பாஜக பல்வேறு சித்து விளையாட்டுகள் மூலம்  முறைகேடு சம்பவங்களை அரங்கேற்றி வரும் நிலையில், ஜம்மு-காஷ்மீர் தேர்த லில் அரசியல் தொடர்பு முறைகேடு விஷயத்திலும் பாஜக இல்லாமல் எதுவும் அரங்கேற வாய்ப்பில்லை என  தகவல் வெளியாகியுள்ளது.

;