states

பாஜகவை புறக்கணித்த பைச்சுங் பூட்டியா

இந்தியாவில் மந்தமாக இருந்த கால்  பந்து விளையாட்டை வளரும் திசைநோக்கி நகர்த்திய முன் னாள் கேப்டன் பைச்சுங் பூட்டியா, கால்  பந்து துறையில் இருந்து 2014இல் ஓய்வு  பெற்றார். சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்தவ ரான இவர் கால்பந்து துறையை மேலும்  வளர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலை யில், திடீரென விளையாட்டுத்துறையில் இருந்து முற்றிலும் விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசி யல் வாழ்க்கையில் காலடி வைத்தார். 2014 தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் சிக்கிமில் போட்டியிட்டு தோல்வியடைந்த பின்பு, அக்கட்சியில் இருந்து விலகி “ஹம்ரோ சிக்கிம் கட்சி” யை தொடங்கி தற்போதைய ஆளும் கட்சி யான சிக்கிம் கிராந்திகரா மோர்ச்சா கட்சி யுடன் இணைந்து 2019இல் தேர்தலை சந்தித்தார். இந்த தேர்தலிலும் பாய்ச்சுங்  பூட்டியாவின் கட்சி பலத்த அடி வாங்கிய  நிலையில், கடந்த ஓராண்டாக அரசிய லில் இருந்து ஒதுங்கி இருந்தார். இவரை  வளைக்க பாஜக தீவிரமாக பணியாற்றி வந்த நிலையில், பாஜகவை புறக்க ணித்து சிக்கிம் ஜனநாயக கட்சியில் இணைந்துள்ளார்.