states

பாஜகவுடன் கூட்டணி வைக்கும் தேவகவுடாவின் முடிவை ஏற்கமாட்டோம்

கொச்சி, அக்.28- கட்சியின் அரசியல் கொள்கைக்கு மாறாக பாஜகவுடன் கூட்டணி வைக்கும் அகில இந்திய தலைவர் எச்.டி.தேவகவுடாவின் நடவடிக்கை யை ஏற்க மாட்டோம் என்று மதச்சார்பற்ற ஜனதா தளம்  கட்சியின் கேரள மாநிலச் செயற்குழு அறிவித்துள்ளது. 

இடது ஜனநாயக முன்னணியில் (எல்.டி. எப்) நீடிப்பது என்றும் தீர்மானம்  நிறை வேற்றியுள்ளது. மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் கேரளத்தைச் சேர்ந்த அகில இந்தியப் பொ றுப்பாளர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள், மாவட்டத் தலைவர்கள் அடங்கிய தலைமைக் கூட்டம் கொச்சியில்  வெள்ளிக்கிழமையன்று (அக்.27)  நடைபெற்றது. 

கூட்ட முடிவில் ,செய்தியாளர் சந்திப்பில் தலைவர் மேத்யூ டி தாமஸ் எம்எல்ஏ கூறுகை யில், “பாஜக எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டணியை கட்சியின் அகில இந்திய பொது மாநாடு ஏற்றுக்கொண்ட அரசியல் நிலைப்பாட்டில் கேரள மாநில அமைப்பு ஒன்றுபட்டுள்ளது. தேவ கவுடாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரி வித்தும், கட்சியின் அரசியல் கொள்கையை நிலைநிறுத்துவது குறித்தும் பல்வேறு மாநிலப் பிரிவுகளுடன் விவாதம் நடந்து வருகிறது. 2006ஆம் ஆண்டு இதே அரசியல் நெருக்க டியை கட்சி சந்தித்தபோதும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கேரள மாநிலப் பிரிவு, எல்.டி.எப் அணியில் உறுதியாக இருந்தது. தற்போதும் கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணியில் மதச்சார்பற்ற ஜனதாதளம் நீடிக்கும்” இவ்வாறு மேத்யூ டி தாமஸ் கூறினார். நேரு காலத்திலிருந்தே இந்தியா பின்பற்றி வந்த கொள்கைக்கு எதிராக இஸ்ரேலை ஆதரிக்கும் மோடியின் நிலைப்பாட்டைக் கண்டித்து நவம்பர் 14-ஆம் தேதி மாவட்டங்களில் பாலஸ்தீன ஒற்று மைப் பேரணி நடத்தவுள்ளதாகவும்  தெரி வித்தார். செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கே.கிருஷ்ணன்குட்டி, அகில இந்திய பொதுச் செயலாளர் ஏ.நீலலோஹிததாஸ், ஜோஸ் தெருவில், சி.கே.நாணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.