states

img

வந்தேபாரத் : தனியார் டெண்டர் ரூ.120 கோடி பாதி விலையில் உருவாக்கியது பிஇஎம்எல்

பாலக்காடு அடிமாட்டு விலையில் விற்க முடிவு செய்த பொதுத் துறை நிறுவனமான பாரத்  எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML) குறைந்த செலவில் வந்தே பாரத் ரயிலை உருவாக்கி வரலாறு படைத்தது. 16 பெட்டிகள் கொண்ட ரயிலின் இன்ஜின் உட்பட 67.5 கோடி ரூபாய் செலவில் கட்டப் பட்டது. சென்னை கோச் தொழிற் சாலை வளாகம், ஊழியர்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதி களை பயன்படுத்தி உருவாக்கி உள்ளது. தனியார் நிறுவனத்திடம் ரூ.120 கோடிக்கு டெண்டர் விடப் பட்டதை பாதி செலவில் உருவாக்கி பெமல் வரலாறு படைத்தது.

160 முதல் 180 கிமீ வேகத்தில் 16 பெட்டிகளுடன் 80 வந்தேபாரத் ரயில்களை உருவாக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்கு ரூ.9,600 கோடி செலவாகும். ஆனால் பெமல் ரூ.5,400 கோடி யில் தயாரிக்க முன்வந்துள்ளது. தற்போது ரூ.675 கோடிக்கு 10 ரயில் பெட்டிகள் கட்ட பெமல் டெண்டர் எடுத்துள்ளது. கேரளத்தில் உள்ள கஞ்ஞிக்கோடு உட்பட நான்கு உற்பத்தி அலகுகள் பெமலுக்கு உள்ளன. வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் பெங்களூரு யூனிட்டால் தயாரிக்கப்பட்டது.

ரூ.56,000 கோடி சொத்து கொண்ட மினி நவரத்னா நிறுவ னத்தை ரூ.1,800 கோடிக்கு விற்க  ஒன்றிய அரசு முடிவு செய்துள் ளது. விற்பனைக்கு எதிராக ஊழி யர்கள் 1327 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வந்தேபாரத் ரயில் கட்டப்பட்ட பிறகு பெமல் பங்கின் விலை ரூ.3600இல் இருந்து ரூ.5000 ஆக உயர்ந்தது.

இன்ஜின் உட்பட 16 பெட்டிகள்

பெமல் உருவாக்கிய வந்தே பாரத் ரயிலில் இன்ஜின் உட்பட 16 பெட்டிகள் உள்ளன. மற்ற ரயில்க ளைப் போல ஒரு பெட்டியை முழுமையாக எஞ்சினுக்கு ஒதுக்க வேண்டாம். பாதி மட்டுமே போதுமானது. 11 ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள், நான்கு ஏசி  இரு அடுக்கு மற்றும் ஏசி முதல் வகுப்பு படுக்கை உட்பட மொத்தம் 823 படுக்கைகள் இதில் உள்ளன.