states

img

கன்னியாகுமரி - கொல்லம் இடையே விரைவில் சிறியரக சொகுசு கப்பல் இயக்கம்

கொல்லம், டிச. 9- கன்னியாகுமரியில் இருந்து கொல்லம்  வரை சிறிய ரக சொகுசுக் கப்பல் சேவை  விரைவில் தொடங்க உள்ளது. தமிழகத்துக் கும் கேரளாவுக்கும் இடையே கப்பல் போக்குவரத்து தொடர்பான உயர்மட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது. இதையடுத்து, கடல்சார் வாரியம் உடன டியாக சிறிய ரக சொகுசு கப்பலை இயக்க தயாராகி வருகிறது. கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கேரளாவுக்கு ஈர்ப்பதே இதன் நோக்கம்.      கடல் கொந்தளிப்பாக உள்ள பருவ மழைக் காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாக இருக்கும் என்ப தால், அதுபோன்ற சீசன் இல்லாத நேரங் களுக்கு மட்டுமே இந்த சேவை மட்டுப்படுத்தப் படும். இந்த சேவை வழக்கமான பயணி களையும் ஈர்க்கும். மீனவர்களுக்கோ மீன்பிடித் தொழிலுக்கோ எந்தவித இடை யூறும் ஏற்படாத வகையில் கடல் மார்க்க மாகவே இந்தச் சேவை மேற்கொள்ளப் படும். அதன் சாத்தியக்கூறுகள் குறித்த விரி வான ஆய்வு விரைவில் தொடங்கும். அறிக்கை சாதகமாக இருந்தால், ஆலப்புழா வரை சேவையை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள் ளது.

கொல்லத்திலிருந்து அதிக கப்பல் சேவைகளை இயக்க விரும்புவோருக்கு ஒரு வாய்ப்பை அளிக்கும் வகையில், அதற் கான பணியில் வாரியம் ஈடுபட்டுள்ளது. தொன்மையான துறைமுக நகரமான கொல்லம், உலக சுற்றுலா வரைபடத்தில் இடம்பெற்றுள்ள கோவளம், காட்சிகளின் ஊடாக மாயாஜால உலகை வழங்கும்  கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களைக் காண வரும் சுற்றுலா பயணிகளுக்கு துறைமுகங்களில் மேலும் அதிக அள விலான அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்படும். இதற்கான முதற்கட்ட நட வடிக்கைகள் விழிஞ்சம் மற்றும் கொல்லத் தில் விரைவில் மேற்கொள்ளப்படும். இந்த சேவை கடல்சார் வாரியத்தால் கண்கா ணிக்கப்படும். கொல்லத்திலிருந்து கன்னியாகுமரிக்கு 85 கடல் மைல் (160 கிமீ) தூரம் உள்ளது. இந்த தூரத்தை ஏழு மணி நேரத்தில் கடக்க  முடியும். கன்னியாகுமரியில் இருந்து திரு வனந்தபுரம் செல்லும் சேவையில் கோவ ளம் மற்றும் வர்கலா ஆகிய இடங்களில் நிறுத்தம் இருக்கும். உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் சுற்றுலா தலங் களுக்கு கடல் வழியாக பயணிப்பது கண்கொள்ளாக் காட்சி அனுபவத்தை அளிக் கும். கடல்சார் வாரியத் தலைவர் வி.ஜே.மேத்யூ கூறுகையில், கொல்லத்தில் சுற்றுலா மற்றும் நீர்வழிப் போக்குவரத்தின் வளர்ச்சியுடன், வர்த்தகம் மற்றும் உள்ளூர் தொழில்களுக்கும் இந்த சேவை பெரும் வாய்ப்புகளைத் திறக்கும் என்றார்.

;