திருவனந்தபுரம்:
சகோதரி அபயா கொலை வழக்கில் பங்குத் தந்தை தாமஸ் கோட்டூர், சகோதரி செபி ஆகியோர் குற்றவாளிகள் என திருவனந்தபுரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றம்தீர்ப்பளித்தது. கொலை நிரூபிக்கப்பட்டதாகவும், சாட்சிகளின் வாக்குமூலங்கள் நம்பகமானவை என்றும் நீதிமன்றம் கூறியது. ஆதாரங்களை அழிப்பதில் இருவரும்குற்றவாளிகள். குற்றவாளிகளுக்கான தண்டனை நாளை அறிவிக்கப்படும்.
1992 மார்ச் 27 அன்று கோட்டயம் பியாஸ்ட் டென்ட் கான்வென்ட்டில் அபயா கொல்லப்பட்டார். குற்றவாளிகளுக்கு இடையிலான தவறான உறவை நேரடியாக சகோதரி அபயா காண நேர்ந்ததேகொலைக்கான காரணம் என்பது சிபிஐவாதம். சகோதரி அபயா கொல்லப்பட்டு 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தீர்ப்புவந்துள்ளது. தீர்ப்பை நீதிபதி அறிவித்ததும் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் கண்ணீர் வடித்தனர். காவல்துறையினர் இது ஒரு தற்கொலை என முடிவு செய்து வழக்கை கைவிட்டனர், பின்னர் பல சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து அபயா கொல்லப்பட்டதை சிபிஐ கண்டறிந்தது மார்ச் 7, 2018 அன்று, திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றம்பங்குத்தந்தை ஜோஸ் புத்ரிகாயிலை விடுவித்தது. குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவரான பிதா தாமஸ் கோட்டூர் மற்றும் சகோதரி செபி ஆகியோரின் விடுதலையை உச்சநீதிமன்றம் 2019 ஜூலை 15 அன்று நிராகரித்தது. இந்த வழக்கு ஆகஸ்ட் 26 அன்று சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. டிசம்பர் 10 ஆம் தேதிவாதம் முடிவடைந்தது.சிபிஐ குற்றப்பத்திரிகையில் மொத்தம் 133 அரசு தரப்பு சாட்சிகள் உள்ளனர். வழக்கு நடந்த 28 ஆண்டுகளில் பல சாட்சிகள் இறந்ததால், 49 சாட்சிகளை மட்டுமே வழக்கு விசாரணைக்கு உட்படுத்த முடிந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக ஒரு சாட்சியைக்கூடகுறுக்கு விசாரணை செய்ய முடியவில்லை.
இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டபோது விசாரணை அதிகாரியாக இருந்த சிபிஐ துணை கண்காணிப்பாளர் வர்கீஸ்.பி.தாமஸ்தான் அபயாவின் மரணம் தற்கொலை அல்ல கொலை என் பதை கண்டறிந்தார். அதைத் தொடர்ந்து விருப்ப ஓய்வு பெற்று பதவியிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்நிலையில் செவ்வாயன்று சிபிஐ நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து அவர் கூறுகையில், வழக்கு விசாரணையின் போது உயர் அதிகாரிகளிடமிருந்து எனக்கு மிகப்பெரும் அழுத்தம் ஏற்பட்டது. இந்ததீர்ப்பு அந்த அதிகாரிகளுக்கு கிடைத்திருக்கும் பதிலடியாகும். என்னோடு பணியாற்றியவர்கள் இன்று உயர் பதவிகளில் உள்ளனர். இந்த வழக்குக்கு நான் அதிகவிலை கொடுத்துள்ளேன். எனக்கு பத் தாண்டுகள் பணிக்காலம் இருந்தபோது விருப்ப ஓய்வு பெற வேண்டிய நிலை ஏற்பட்டது என்றார். செய்தியாளர்களிடம் இதைக் கூறுகையில் அவர் கண்ணீர் சிந்தினார். அது தீர்ப்பால் கிடைத்துள்ள மகிழ்ச்சியின் வெளிப்பாடு என்றார்.
அபயா கொலையை நேரில் பார்த்தவர் அன்றைய தினம் திருடுவதற்காக அங்கு சென்ற அடைக்கா ராஜு. முக்கியசாட்சியான இவரையே குற்றவாளியாக்கும் முயற்சி காவல்துறை தரப்பில் நடந் தது. தீர்ப்பு குறித்து அவர் கூறுகையில், எனக்கும் பெண் பிள்ளைகள் உள்ளனர்.இவளும் (சகோதரி அபயா) எனது மகளைப்போலதான். அவளுக்கு நீதி கிடைத் திருக்கிறது. எனக்கு கோடிக்கணக்கில் பணம் தர முன்வந்தார்கள். நான் அதற்குஉடன்படவில்லை. காலனியில் உள்ள 3 சென்ட் நிலத்தில் கட்டிய வீட்டில் வாழ்கிறேன் என்றார்.குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ள நிலையில் துபாயில் வசிக்கும் அபயாவின்சகோதரர் பிஜு தாமஸ் கூறுகையில், எனது சகோதரி கொல்லப்பட்டபோது நான்குஜராத்தில் இருந்தேன். அப்போது முதல்வராக இருந்த கே.கருணாகரன் தூர்தர்சனில் சகோதரி அபயா தற்கொலைசெய்து கொண்டதாக கூறியதுதான் எனக்கு கிடைத்த முதல் தகவல். சபை தலையிட்டு இந்த கொலையை தற்கொலையாக மாற்ற பெரும் முயற்சி நடந்தது. தாமதமாக என்றாலும் தற்போது நீதி கிடைத்து ளதாகவும், ஊடகத்தினருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.