கேரள கல்வித்துறை அமைச்சர் வி. சிவன்குட்டி பேட்டி
திருவனந்தபுரம், டிச. 17 - கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இயங்கி வரும் பாலுசேரி அரசு மேல் நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவ - மாணவியர்க்கு பாலின வேறுபாடின்றி ஒரே மாதிரியான சீருடை (சட்டை - பேண்ட்) அறிமுகப்படுத்தப்பட்டது. பாலின சமத்துவத்திற்கான நடவ டிக்கைகளில் ஒன்றாக, கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் ஆர். பிந்து கடந்த செவ்வாய்க்கிழமையன்று (டிசம்பர் 14) இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்தார். மாணவிகளுக்கு சவுகரியமாக அமைந்துள்ளது. விளையாட்டுகள் மற்றும் இதர போட்டிகளில் கலந்து கொள்ள இந்த உடை மாணவிகளுக்கு ஏதுவாக இருக்கிறது என்று சீருடை மாற்றத்திற்கு, பல்வேறு தரப்பினரின் வரவேற்பு கிடைத் தது. இதனை மாநிலம் முழுவதும் நடை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக் கைகளும் எழுந்தன.
ஆனால், சமஸ்தா கேரளா ஜமியத்துல் உலாமா ஏபி பிரிவினரும், இகே பிரிவின ரும், ஜமாத் இஸ்லாம் கட்சியினரும், கேரள நடுவத்துல் முஜாஹிதீன் கட்சியினரும், இது கலாச்சாரத்தை சீர்குலைக்கும் நடவ டிக்கை என்று போராட்டங்களில் இறங்கி யுள்ளனர். இந்நிலையில், பள்ளிச் சீருடையில் பாலின சமத்துவத்தை நிலைநாட்டும் புதிய யோசனைகளுக்கு கேரள அரசு துணை நிற்கும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் டாக்டர் வி. சிவன்குட்டி உறுதி படக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பேட்டி ஒன்றை அவர் அளித்துள்ளார். அதில், “எர்ணாகுளம் வலையன் சிரங்காரா அரசு எல்பி பள்ளி ஒருமித்த கருத்துடன் ஏற்றுக்கொண்ட சீருடை தொடர்பான முடிவையும், பாலுச்சேரி அரசு பெண்கள் எச்.எஸ்.எஸ்., பொதுக்குழு எடுத்த முடிவையும் பொதுக் கல்வித்துறை ஏற்கெனவே வரவேற்றுள்ளது. ஆனால் எதையும் திணிக்கக் கூடாது என்பது கொள்கை. சீருடை விஷயத்திலும் யாரும் கட்டாயப்படுத்தப்படவில்லை. இந்த விஷ யங்கள் அனைத்தையும் சமூகம் விவா திக்கட்டும். சமூகத்தில் ஏற்படும் முற்போக் கான மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டுதான் கல்விச் செயல்முறை முன்னேற முடியும்” என்று அமைச்சர் வி. சிவன்குட்டி தெளிவுபடுத்தியுள்ளார்.