states

img

புழுங்கல் அரிசி ஒதுக்கீடு குறைப்பு:நெருக்கடியில் கேரள மக்கள்

திருவனந்தபுரம், ஜன.21- ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படும் புழுங்கல் அரிசியை ஒன்றிய அரசு நிறுத்தியதால் மக்கள் நெருக்கடியில் தள்ளப் பட்டுள்ளனர். கடந்த 5 மாதங் களாக ரேசன் கடைகளில் கோதுமை, காய்கறிகள் மட்டுமே விநியோகிக்கப்படு கிறது. கேரளத்திற்கான பங்கை 70இல் இருந்து 30 சத விகிதமாக ஒன்றிய அரசு குறைத்துள்ளது. மாறாக, பச்சை அரிசி 70 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அரிசி விநியோகம் குறைந்துள்ளதால், ரேசன் முறையை நம்பியுள்ள பொதுமக்கள் கடும் அவதிக் குள்ளாகியுள்ளனர். சாதார ணமாக மஞ்சள் அட்டைதா ரர்களுக்கு (அந்தியோதயா  அன்ன யோஜனா) 30 கிலோ அரிசியும், 4 கிலோ கோது மையும் கிடைக்கும். இதில், புழுங்கல் அரிசி 15, மட்டை அரிசி- 5, பச்சரிசி- 10 கிலோ கிடைத்து வந்தது. ஆனால், இந்த விநியோகம் கடந்த பல மாதங்களாக நிறுத்தப் பட்டுள்ளது.

வசதிக்காக மாவேலி மற்றும் சப்ளைகோ

மாவேலியும் சப்ளைகோ வும் வழங்கும் புழுங்கல் அரிசி மக்களுக்கு ஆறுத லாக உள்ளது. மாவேலி மற்றும் சப்ளைகோ கடைக ளில் மானிய விலையில் அரிசி கிடைக்கிறது. குருவா  ரகம் கிலோ ரூ.25, மட்டை அரிசி - ரூ.24, ஜெயா ரூ.25. ஒரு குடும்ப அட்டைக்கு மாதத்தில் இரண்டு முறை 10 கிலோ அரிசி வீதம் வழங் கப்படும். மாவேலி ஸ்டோர்ஸ் தற்போது பரபரப்பாக இயங்கி வருகிறது.