states

img

உலகின் செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவர்... பைனான்சியல் டைம்ஸ் பட்டியலில் கே.கே.ஷைலஜா...

திருவனந்தபுரம்:
கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜா இந்த ஆண்டு பைனான்சியல் டைம்ஸால் ‘உலகின் செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவராக’அறிவிக்கப்பட்டுள்ளார்.இந்தியாவின் கோவிட் போராட்டத்தில் பாராட்டத்தக்க பங்களிப்பு செய்த‘கேரளாவின் கோவிட்போராளி’ என்றதலைப்பில் அமைச்சரின் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டன்,அமெரிக்க துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ்,தைவான் ஜனாதிபதி சாய் இங்வென், ஜெர்மன்ஜனாதிபதி அங்கேலா மேர்க்கெல் உட்பட 11 பேர்மற்றும் உலகில் பணிபுரியும் அனைத்து தாய்மார்களும் பட்டியலிட்டுள்ளதாக பைனான்சியல் டைம்ஸ் வலைத்தளம் தெரிவித்துள்ளது. ஒவ்வொருஆண்டும் டிசம்பரில் அந்த ஆண்டுக்கான பட்டியலை பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்டு வருகிறது.

பஹத் பாசில்
திரைப்பட நடிகர் பஹத் பாசில் அமைச்சர் கே.கே.ஷைலஜாவின் படம் இடம்பெற்ற வோக் இதழின்முகப்பு பக்கத்தை தனது சமூகஊடகத்தின் முகப்பு படமாக வைத்துள்ளார். வோக் இதழ்‘ஆண்டின் சிறந்த பெண்’ விருதுக்குஅமைச்சர் கே.கே.ஷைலஜாவை தேர்வு செய்யப்பட்டதற்கு நடிகர்பஹத் பாசில் வாழ்த்து தெரிவித்தார். சில நிமிடங்களில் பல்லாயிரக்கணக்கான லைக்குகள் இந்தபதிவுக்கு கிடைத்துள்ளது. வோக்இதழின் அமைச்சருடனான நேர்காணல் சமூக ஊடகங்களிலும் மிகுந்த கவனம் பெற்றதுகுறிப்பிடத்தக்கது.