states

img

சுகாதாரக் குறியீட்டில் கேரளா முதலிடம்

திருவனந்தபுரம், டிச.29- நிதி ஆயோக் சுகாதாரக் குறியீட் டில் தொடர்ந்து நான்காவது முறை யாக கேரளா முதலிடத்தைப் பிடித்துள் ளது. இது இந்தத் துறையின் நடவடிக் கைகளுக்கு வலு சேர்க்கும். ஒமைக் ரான் பரவலைத் தடுக்க மிகவும் கவனமான தலையீடு தேவைப்படு கிறது. நமது முழு சுகாதார அமைப் பும் அதற்கு தயாராகி வருகிறது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது முகநூல் பதி வில் பினராயி விஜயன் குறிப்பிட்டுள் ளதாவது: 2019-20 ஆம் ஆண்டிற் கான சுகாதார செயல்பாட்டு பட்டிய லில் கேரளா நூற்றுக்கு 82.20 மதிப் பெண்களுடன் முதலிடத்தில் உள்ளது. கடுமையான வெள்ளத்தின் போதும் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது கூடு தல் முக்கியத்துவம் பெறுகிறது.

சுகா தார நடவடிக்கைகள், நிர்வாக அமைப் புகளும் சேவைகளும், ஊழியர்க ளும் மருத்துவமனைகளும் ஆகிய மூன்று பிரிவுகளில் 24 அளவுகோல்க ளின் அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையைப் பலப்படுத் துக என்கிற இடதுசாரிக் கொள்கை யைச் செயல்படுத்த முடிந்ததால் இந்த சாதனை நிகழ்ந்திருக்கிறது. சுகாதார ஊழியர்களின் தியாகம் இந்த பொறுப் பை சிறந்த முறையில் நிறைவேற்ற எங்களுக்கு உதவியது. கோவிட் எதிர்ப்பில் ஒன்றாக வேலை செய்ய வும் முடிந்தது. சாதனைகளைத் தக்க வைத்துக் கொள்ளவும், சவால்களை கடக்கவும் நம்மால் சாத்தியமாக வேண்டும். இந்த போராட்டத்தில் தோ ளோடுதோள் சேர்த்து அணிவகுப் போம் என்கிற உறுதிப்பாடே இந்த சாத னைக்கு கைமாறாகும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.