states

img

கேரள சட்டப் பேரவைத் தேர்தல்: மார்ச்சில் அறிவிப்பு மே-யில் 2 கட்டங்களாக நடக்க வாய்ப்பு....

திருவனந்தபுரம்:
கேரள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளி யாகலாம் என தெரிய வந்துள்ளது. தேர்தல் ஆணைய வட்டார தகவல்களின்படி, மே மாத தொடக்கத்தில் இரண்டு கட்டங்களாக வாக்கெடுப்பு நடைபெறும். முதற்கட்ட ஆலோசனையின் ஒரு பகுதியாக, தலைமை தேர்தல் அதிகாரி திக்காராம் மீனா மாவட்ட ஆட்சியர்களுடன் சனியன்று (டிச.19) காணொலி மூலம் கலந்துரையாடல் நடத்தினார்.

தேர்தல் செயல்முறைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது என்றார். வாக்காளர் பட்டியல் புதுப்பித்தல் நடைபெற்று வருகிறது. நவம்பர் 16 அன்று வெளியிடப்பட்ட வரைவு பட்டியலில் 2.63 கோடி வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தது ஆறு லட்சம் வாக்காளர்கள் புதிதாக பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான காலக்கெடு டிசம்பர் 31 ஆகும்.கொட்டிக்கலாசம் உள்ளிட்ட நெரிசலான நிகழ்வுகளைத் தவிர்க்க அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசித்து முடிவுஎடுக்கப்படும். கோவிட் பாதிக்கப்பட்ட வர்களின் சிறப்பு அஞ்சல் வாக்குகளில் சிலநடைமுறை சிக்கல்களை மாவட்ட ஆட்சியர்கள் சுட்டிக்காட்டினார்கள். இந்த செயல்முறை சீராக நடந்தால், வெளிநாட்டவர்கள் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்று திக்காராம் மீனா கூறினார்.

;