states

img

வறட்சியாலும் மழையாலும் கேரள விவசாயிகள் பாதிப்பு

திருவனந்தபுரம், மே 29-  கேரளத்தில் கடந்த ஒரு மாதத் தில் விவசாயத் துறையில் ஏற்  பட்ட இழப்பு ரூ.380.59 கோடி யை எட்டியுள்ளது. கனமழை யைத் தொடர்ந்து கடும் வறட்சி நிலவியது. 

இதில் இடுக்கியில் பெரும்  பாலான விவசாயிகள் பாதிக் கப்பட்டுள்ளனர். இடுக்கி மாவட்டத்தில் மட்டும் ரூ.116 கோடி மதிப்பில் இழப்பு ஏற்  பட்டுள்ளது. இதுகுறித்த முதற் கட்ட தகவல்களை வேளாண் துறையினர் சேகரித்துள்ளனர்.

மாவட்டங்களில் வேளா ண்மைத் துறை கட்டுப்பாட்டு  அறைகளைத் தொடங்கியுள் ளது. இழப்பு ஏற்பட்ட விவசாயி களுக்கு காப்பீட்டுப் பலன்  களை விரைவாக வழங்கவும்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. காய்கறிகள் பெருமள வில் அழிந்தன. நெல், வாழை, ரப்பர், தென்னை, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களும் சேதம டைந்துள்ளன. இதைத் தொட ர்ந்து சந்தையில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக இடுக்கி மாவட்டத்தில் 12,298.74 எக்டேரில் 19,519 விவசாயிகளுக்கு ரூ.116.24 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை

அமைச்சர் கே.ராஜன் பேட்டி

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் போர்க்கால அடிப்ப டையில் நடவடிக்கை எடுக்க சம்  பந்தப்பட்ட துறைகளுக்கு வருவாய்த் துறை அமைச்சர் கே.ராஜன் உத்தர விட்டுள்ளார்.    

இதுகுறித்து அமைச்சர் கே.ராஜன்  செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

iமழைக்காலத்திற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு, நீர் தேங்கு வதை சமாளிக்க துறைகளுக்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது. கேரளத்தில் பரு வக்காற்றின் தாக்கம் வலுவடைந்த தைத் தொடர்ந்து மழை பெய்து வரு கிறது. கோடை மழை எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்துள்ளது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளும், அரசு அமைப்புகளும் பருவமழைக் காலத்தை அதிக தீவிரத்துடன் அணுக வேண்டும். பருவமழையின் முதல் பகுதியில் மழைப்பொழிவு அதிகரிப்பது நெருக்கடியை அதிகரிக்கும். இதை  எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடு கள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

தற்போது, 3593  முகாம்களை நடத்து வதற்கான ஏற்பாடு கள் நடந்து வருகின் றன. ஒன்பது முகாம்  களில் மக்கள் உள்ள னர். பருவமழை வருவதால் மக்க ளுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் அவர்களுக்கு உதவுவதன் ஒரு பகுதியாக, 5,66,785 பேர் தங்கும்  வகையில் முகாம்கள் தயார் செய்யப் பட்டுள்ளன. பருவமழை முதல் பகுதி  முடியும் வரை, தேவையற்ற விடுப்பு எடுக்கவோ, அப்பகுதியை விட்டு வெளி யேறவோ கூடாது என, வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியான பிரச்சாரங்களை பகிரக்கூடாது.

இவ்வாறு அமைச்சர் தெரிவித் துள்ளார்.
 

;