திருவனந்தபுரம், மார்ச் 30- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பெண் தலைவர்களை அவ மதித்ததாக பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன் மீது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலச் செயலாளர் சி.எஸ்.சுஜாதா அளித்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருச்சூரில் நடைபெற்ற பா.ஜ.க.வின் மகளிர் மோர்ச்சா மாநாட்டின் வரவேற்புக் குழுக் கூட்டத்தில் பேசிய கே.சுரேந்திரன், ‘சிபிஎம்மில் உள்ள பெண்கள் குண்டாக வளர்ந்து பூதம்போல் ஆகிவிட்டனர்’ என்று கூறினார். பெண்களை உடல் ரீதி யாகவும், பாலியல் ரீதியாகவும் இழிவுபடுத் தும் சுரேந்திரனின் கருத்து பெண்களை இழிவுபடுத்துவதாக உள்ளதாகவும், இந்திய தண்ட னைச் சட்டம் மற்றும் சைபர் சட்டத்தின் கீழ் அவரை தண்டிக்க வேண்டும் என்றும் புகாரில் சி.எஸ். சுஜாதா கோரியிருந்தார். டி.ஜி.பி.யின் அறிவுறுத்த லின்படி, நகர போலீஸ் கமிஷனர், கண்டோன் மெண்ட் எஸ்.எச்.ஓ.,விடம் வழக்குப்பதிவு செய்யுமாறு கூறினார். இதுதொடர்பாக மாநில காவல்துறை தலைவர் மற்றும் மாநில மகளிர் ஆணையத்திடமும் புகார் அளிக்கப்பட்டது. பாஜக தலைவரின் பேச்சுக்கு காங்கிரஸ் உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.