திருச்சூர், ஜுன் 16- திருச்சூர் மற்றும் பாலக்காட்டில் ஜுன் 16 ஞாயிறன்றும் நிலநடுக்கம் ஏற்பட் டது. எனினும் சனியன்று இருந்ததை விட தீவிரம் குறைந்துள்ளதால் அச்சப் படத் தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருச்சூரில் அதிகாலை 3.55 மணி யளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நான்கு மணிக்கு பாலக்காடு. திருச்சூரில் குன்னம்குளம், எருமப்பட்டி, வேலூர், வடக்கஞ்சேரி பகுதிகளில் இந்த அசைவு உணரப்பட்டது. பாலக்காடு அணக்கரா, திரிதாலா பகுதிகளில் இயக்கம் இருந்தது. இரு மாவட்டங் களிலும் வினாடிகள் வித்தியாசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அச்சப்படத் தேவையில்லை என சுரங்கம் மற்றும் புவியியல் துறை தெரிவித்துள்ளது.
அதிகாலை நேரம் என்பதால் நில நடுக்கத்தை மக்கள் அடையாளம் கண்டு கொண்டனர். இந்த நிலநடுக்கம் சனியன்றும் உணரப்பட்டது. அத னால் எல்லோருக்கும் விசயங்கள் புரிய வில்லை. நிலத்தடியில் இருந்து சத்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகள் கூறினர். இதுபோன்ற நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.