states

img

மதவெறிப் பிரச்சனை எழும்போது ஓட்டும், இடங்களும் முக்கியமல்ல.... தியாகி அபிமன்யு நினைவக திறப்பு விழாவில் முதல்வர் பேச்சு...

கொச்சி:
இளம் தோழர் அபிமன்யு கோடிக்கணக்கான குடும்பங்களின் மகனாகவும் சகோதரனாகவும் மாறிவிட்டார் என்று கேரளமுதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். வகுப்புவாத சக்திகள் அதை அறிந்திருக்கின்றன. ஒரு கொலை மூலம் சோர்வடையச் செய்வதே அவர்களின் நோக்கம் என்றால், அதற்கு நேர்மாறாக  மேலும் வீரியத்துடன் வகுப்புவாதத்துக்கு எதிராக போராடுவோம் என்கிற உறுதிமொழியே அபிமன்யுவின் விருப்பத்தை உயர்த்திப்பிடிக்கும் அனைவரும் ஏற்க வேண்டிய சபதமாகும் என்றும்அவர் கூறினார்.

கொச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கேரள மாணவத் தியாகிதோழர் அபிமன்யு நினைவு கட்டிடத்தை முதல்வர் செவ்வாயன்று திறந்து வைத்து ஆற்றிய உரை: வகுப்புவாத அமைப்புகளான கேரள எஸ்டிபிஐ ஆனாலும், ஆர்எஸ்எஸ் ஆனாலும், அவர்களின்நோக்கம் நாட்டின் ஒருமைப்பாட்டையும் மக்கள் ஒற்றுமையையும் அழிப்பதும், வகுப்புவாத மோதலை வளர்ப்பதுமாம். உயர்ந்த மனித மாண்புகளை அவர்கள் மதிப்பதில்லை. எஸ்எப்ஐ மாணவர்கள் சோசலிச முழக்கங்களை எழுப்பும்போது, அது அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. அவர்களுக்கு வேறுஉலகம் இருக்கிறது. அது குறுகியது. மற்றவர்களுக்கு அதில் இடமில்லை.வகுப்புவாதத்தை மதச்சார்பற்ற முறையில் மட்டுமேகையாள முடியும். சிறுபான்மையினர் பெரும்பான்மை வகுப்புவாதத்தின் சவாலை தமக்குள் ஒழுங்கமைத்து எதிர்கொள்வது முட்டாள்தனம். மாறாக, அதை மதச்சார்பற்றஜனநாயக சக்திகளுடன் இணைந்து மட்டுமே எதிர்கொள்ள முடியும். இதைக்கூறுகையில் வகுப்புவாதத்தை யார் சரியான முறையில் எதிர்கொள்கிறார்கள் என்பதை நாம் அனுபவத்தின் மூலம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சமீபத்திய தேர்தல்களில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைமை ஏறக்குறைய சரியான நிலைப்பாட்டை எடுத்தது. ஜமாத்-இ-இஸ்லாமியுடன் தொடர்பு கொள்ள வேண்டாம் என்பது அந்த முடிவு.

ஆனால் கேரளாவில் காங்கிரசின் புதிய ஒருங்கிணைப்பாளர் ஜமாஅத் தலைவர்களுடன் கலந்துரையாடினார். கேபிசிசி தலைவர் இந்த கூட்டணிக்கு எதிராக பலவீனமான குரலில் பேசினார். ஆனால் உறுதியாக நிற்கவில்லை. பின்னர் அவர்களுடன் ஒத்துப் போனார். தேர்தலில் தோல்வியடைந்த போது, அத்தகைய கூட்டணி அவசியம் இல்லாதது என்று வாதிடப்பட்டது. மக்கள் இவற்றை சரியாக புரிந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி நிரலுக்கு முதலில் தொடக்கமிட்டது கேரள முஸ்லிம் லீக். ஆனால், அதை விமர்சித்தது வகுப்புவாத எண்ணம் எனவிமர்சிக்கப்பட்டது. இனவாதத்திற்கு எதிராக சிபிஎம் எடுத்தநிலைப்பாட்டை நாடு நன்கு அறியும். இதை ஒரு நாளில் அழிக்க முடியாது. வகுப்புவாதத்தின் அடிப்படையில் முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக நாட்டில் மிகக் கடுமையான பிரச்சனைகள் எழுந்தபோது, காங்கிரஸுடன் பக்கபலமாக இருந்தவர்கள் லீக்கின் தலைவர்கள் தான் என்பதை நாடு மறக்கவில்லை.இதெல்லாம் நாட்டின் வரலாறு. எந்தவொரு வகுப்புவாத பிரச்சனையிலும் சிபிஎம் வாக்குகள் மற்றும் வெற்றி பெறும் இடங்களுக்காக ஒரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை. காங்கிரஸ் பெரும்பாலும் வகுப்புவாதத்துடன் சமரசம் செய்கிறது. இது மதச்சார்பின்மையை பலவீனப்படுத்துவதாகும். கடந்த தேர்தலிலும் நாங்கள் அதைப் பார்த்தோம். அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது. மதச்சார்பின்மையைப் பாதுகாக்க வகுப்புவாத சக்திகள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அதற்கு அபிமன்யு போன்றவர்களின் தியாகம் நமக்கு மேலும் ஆவேசம் அளிக்கும்.அபிமன்யுவின் நினைவாக, அந்த போராட்டத்தை நாம் இன்னும் தீவிரமாக தொடர வேண்டும். இவ்வாறுமுதல்வர் கூறினார்.