states

img

கேரளத்தில் கோவிட் தடுப்பு பணிகளில் சிபிஎம் அலுவலகம்...

கோழிக்கோடு:
கொடுவள்ளியில் உள்ள தோழர் மத்தாய் சாக்கோ - தோழர் ஓ பாஸ்கரன் நினைவிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் கமிட்டி அலுவலகம். இந்த அலுவலகம் கோவிட் உதவி மையமாக  செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎம் கொடுவள்ளி அலுவலகத்தில் கோவிட் தொடர்பான 24 மணி நேர சேவை உண்டு. கோவிட் பரிசோதனை மேற்கொள்வதற்கான உதவி, நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கான உதவி, அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களை விநியோகம் செய்வதற்கான உதவி, தொற்று நீக்கம் போன்றவற்றுக்கான உதவி கிடைக்கும். கொடுவள்ளியைச் சேர்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும், இந்திய மாணவர் சங்கத்தினரும் தொண்டர் படையாக பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 30 பேர் ஓட்டுநர்கள். நான்கு வாகனங்களின் சேவை எப்போதும் கிடைக்கும். தன்னார்வலர்களான ஊழியர்களுக்கு நோய் வந்தால் தனிமையில் தங்க ஐந்து இடங்களில் வீடுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

;