states

img

கேரளாதான் பாதுகாப்பான, அழகான நாடு: அருந்ததி ராய்

கொச்சி, மே 16 - ‘கேரளா தான் பாதுகாப்பான நாடு’ என்று பிரபலஎழுத்தாளர் அருந்ததிராய் கூறினார். யுவதாரா இலக்கிய விழாவில் ‘தற்கால இந்தியா’ என்ற தலைப்பில் அருந்ததி ராய் உரை யாற்றினார்.  அப்போது அவர் மேலும் பேசுகையில், பாஜகவுக்கு எதிராக  அனைவரும் ஒன்றுபட வேண்டும். தென்னிந்தியாவில் சாத்தியமான வெற்றியும் அதற்கான போராட்டமும் தில்லி வரை பரவ வேண்டும். நாம்  ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோம். அனை வரும் ஒன்றுபட்டு நிற்க  வேண்டிய நேரம் இது. பாசிஸ்டுகள், அடிப்படையில் முட்டாள்கள். அவர்கள் அனைத்து விவேகமான தலையீடுகளையும் எதிர்ப்பார்கள். நாட்டின் பெரும்பாலான ஊடகங் களுக்கு நிதி அளிப்பது கார்ப்பரேட் நிறுவனங்களாகும். ஊடகங்கள் கண்ணியத்தின் அனைத்து எல்லை களையும் உடைத்து வருகின்றன. ஊடகங்களின் உண்மையான பங்கை நிறைவேற்றுவது நவீன சமூக ஊடகங்களாகும். அதனால்தான் ஒன்றிய அரசு அவர்களைக் கட்டுப்படுத்த முயல் கிறது. புதிய தகவல் தொழில்நுட்ப சட்டம் இதன் ஒரு பகுதியாகும். கேரளா தான் பாதுகாப்பான, அழ கான நாடு, ஒன்றிய அரசின் வெட்டி  சுருக்கிய பாடங்களை மாணவர்க ளுக்கு கற்பிக்கும் மாநில அரசின் முடிவு பாராட்டுக்குரியது. இது மத  நல்லிணக்க பூமி. கேரளா ஸ்டோரி திரைப்படத்தை யாரும் நம்பமாட்டார்கள். இது அபத்தமான முயற்சி என்று அருந்ததி ராய் கூறினார்.