states

img

நாட்டின் இளம் வயது மேயராகி ஆர்யா சாதனை

கேரளாவைச் சேர்ந்த ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராகி சாதனை படைத்துள்ளார். 
கேரளாவில் 3 கட்டங்களாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலாக இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆகியவை தேர்தலை எதிர்கொண்டன. இதில் இடது முன்னணியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெருவாரியான இடங்களை கைப்பற்றினர். 
இதில் மூடவன் முகவலை சேர்ந்த சிபிஎம் வேட்பாளர் ஆர்யா ராஜேந்திரன் அப்பகுதியில் மாமன்ற பிரதிநிதியாக தேர்வானார். இதைத்தொடர்ந்து ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரம் மேயராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்வு செய்து  உள்ளது. இதன் மூலம் நாட்டின் மிக இளம் வயதில் மாநகராட்சி மேயராகி ஆர்யா சாதனை படைத்துள்ளார். 
மேயராக முன்னிறுத்தப்பட்டுள்ள ஆர்யா  ஆல் செயின்  கல்லூரியில் இளங்கலை கணிதம் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்திய மாணவர் சங்கத்தின் கேரள மாநிலக்குழுவில் உறுப்பினராகவும், பாலர் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் உள்ளார் . 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக உள்ள ஆர்யா தனக்கு ஒப்படைக்கப்பட்ட பணியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.