திருவனந்தபுரம், செப்.9- கேரளாவில் மக்களிடையே டிஜிட்டல் பயன்பாட்டு ஏற்றத்தாழ்வைக் குறைக்க வும், மலிவு விலையில் அதிவேக இணைய இணைப்பை உறுதி செய்யவும் மாநில அரசால் தொடங்கப்பட்ட கே-போன் (கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க்) செயல்பாட்டுக்கு வர உள்ளது. ‘ஒரு தொகுதியில் நூறு ஏழை வீடு’ திட்டத்தின் கீழ் மொத்தம் 14 ஆயிரம் வீடு களுக்கு இணைப்பு வழங்கப்படும். 4 ஆயிரம் குடும்பங்கள் இலவசமாக இதில் இணைக்கப்படும். தகுதியான குடும்பங்க ளின் பட்டியல் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வரும் 20-ஆம் தேதிக்கு முன்பு கே-போனுக்கு அனுப்பி வைக்கப்படும். அரசு அலுவலகங்களில் கே-போன் நிறுவும் பணி ஏற்கனவே முடிந்துவிட்டது. 8 ஆயிரம் அலுவலக இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. உள்கட்டமைப்பு வழங்குநர் வகை 1 உரிமம் மற்றும் இணைய சேவை வழங்கும் உரிமத்தை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.
இத்திட்டத்தின் 83 சதவிகித கட்டுமானப் பணிகள் நிறைவ டைந்துள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். பணமாக்கு தல் மற்றும் சேவையை வழங்குவதற்கான விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை வகுக்க ஒரு செயலாளர் அளவிலான குழு உருவாக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு 476.41 கோடி செலவிடப்பட்டது. பாரத் எலக்ட்ரா னிக்ஸ் லிமிடெட் தலைமையிலான ஒரு கூட்டமைப்பு இத்திட்டத்தை செயல்படுத்து வதற்கு பொறுப்பாகும். கேரளாவின் கனவுத் திட்டம் நிறைவேறி னால், 20 லட்சம் பின்தங்கிய வீடுகள் மற்றும் 30 ஆயிரம் அரசு அலுவலகங்கள் சிறந்த இணைய இணைப்பு பெறும். இதன் மூலம் டிஜிட்டல் வசதிகளில் சிறந்த மாநில மாக கேரளா மாறும். 8,551 கி.மீ., அடிப்படை கேபிள் மற்றும் 26,410 கி.மீ., இணைப்பு கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளன. சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட அரிதான இடங்க ளில் மட்டுமே தாமதம் ஏற்பட்டது.