திங்கள், மார்ச் 1, 2021

states

img

தேசாபிமானி 75-வது ஆண்டு நிறைவு... சந்தா சேர்ப்பை தீவிரப்படுத்த சிபிஎம் அழைப்பு....

திருவனந்தபுரம்:
தேசாபிமானியை நாளிதழாக மாற்றிய 75 ஆவது ஆண்டு நிறைவின் ஒரு பகுதியாக, கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வருடாந்திர சந்தாதாரர்களைச் சேர்க்க முன்வருமாறு சிபிஎம் கேரள மாநிலச் செயற்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

தேசாபிமானி 1942 இல் வாராந்திரியாக தொடங்கப்பட்டது. 1946 ஆம் ஆண்டில் தினசரி செய்தித்தாளான தேசாபிமானி இப்போது கேரளாவில் 10 பதிப்புகளைக் கொண்டுள்ளது. சமீபத்தில், செய்தித்தாள் வாசகர்களின் வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் மலையாள செய்தித்தாள்களில் முதலிடத்தை எட்ட முடிந்தது. தேசாபிமானி இப்போது ஒரு பொது செய்தித்தாளாக உயர்ந்து கட்சியின் செய்தித்தாள் என்கிற பொறுப்பை நிறைவேற்றும்முயற்சியில் உள்ளது. ஊடகங்கள் பெரும்பான்மை யாகவும், வலதுசாரி அரசியலின் பிரச்சாரகராகவும், கம்யூனிச எதிர்ப்பு சின்னமாகவும் இருக்கும் நேரத்தில், தேசாபிமானியின் பிரச்சாரத்தை அதிகரிப்பது தொழிலாளர் வர்க்கத்தின் பொறுப்பாகும்.

திங்களன்று (ஜன.18) திரிசூரில் ஏ. விஜயராகவன், பேபி ஜான் ஆகியோரும், காசர்கோடில் பி. கருணாகரனும் பிரச்சார இயக்கத்திற்கு தலைமை வகித்தனர். இடுக்கியில் கே.ராதாகிருஷ்ணன், கண்ணூரில் பி.கே. எம்.சி.ஜோசபின், எர்ணாகுளத்தில் கே.ராதாகிருஷ்ணன், பி ராஜீவ் ஆகியோரும், திருவனந்தபுரத்தில் எம்.வி.கோவிந்தன், கொல்லம் சூரனாட்டில் ஆனந்தலவட்டம் ஆனந்தன் ஆகியோரும் தலைமை வகித்தனர். பத்தனம்திட்டா, கோட்டயம் ஆகிய இடங்களில் கே.ஜே.தாமஸ்,  கொல்லம் நகரில் கே.என்.பாலகோபால் ஆகியோர் பிரச்சாரத்திற்கு தலைமை வகித்து வழிநடத்தினர்.

;