states

img

ஒரே நாளில் 356 திருமணங்கள்

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன் றான குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் (திருச்சூர் மாவட்டம்), கேரள  மாநிலத்தில் மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநி லங்களில் இருந்தும் இங்கு தரிச னத்திற்காக பக்தர்கள் தினமும் வருகின்ற னர். குறிப்பாக முகூர்த்த நாட்களில் இக் கோவிலில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுவது வழக்கமானது என்ற நிலையில், நாட்டிலேயே இதுவரை இல்  லாத வகையில் ஞாயிறன்று ஒரே நாளில்  356 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி குரு வாயூர் கோவிலில் வரலாறு படைத் துள்ளது. 

கடந்த 2022 ஆகஸ்ட் 21 அன்று குரு வாயூர் கோவிலில் 248 திருமணங்கள் நடந்தே முந்தைய சாதனையாக இருந்த நிலையில், இந்த சாதனை ஞாயிறன்று முறியடிக்கப்பட்டது. 356 ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடந்ததால் குருவாயூர் நகரமே ஞாயிறன்று விழாக்  கோலம் பூண்டது. எங்கு பார்த்தாலும் திரு மண ஜோடிகளே அதிகம் காணப்பட்ட தால், குருவாயூர் நகரம் திருமண ஜோடி களின் “ஹாட் ஸ்பாட்” போல காட்சி அளித்தது.