states

img

கேரளத்தில் தொழில்முனைவோர் ஆண்டு: 8 மாதங்களில் 2 லட்சம் வேலைவாய்ப்புகள்

கொச்சி, நவ.27- கேரள தொழில் துறையின் தொழில் முனைவோர் ஆண்டு திட்டத்தின் ஒரு பகுதியாக எட்டு  மாதங்களில் 2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ் செய்தியாளர் களிடம் கூறியதாவது:  தொழில் நிறுவனங்கள், முதலீடு, வேலை வாய்ப்பு போன்றவற்றில் இத்திட்டம் இணையற்ற பலன் களை அடைந்துள்ளது. திட்டம் தொட ங்கப்பட்டு 235 நாட்களுக்குப் பிறகு இந்த சாதனை படைத்துள்ளது. ரூ.5655.69 கோடி முதலீடு கேரளா விற்கு வந்துள்ளது. திட்டத்தின் ஒரு பகுதியாக 92,000 நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மலப்புரம் மற்றும் எர்ணா குளம் மாவட்டங்களில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள் ளன. இந்த இரண்டு மாவட்டங்களி லும் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப் பட்டன. கொல்லம், திருச்சூர், திரு வனந்தபுரம், கோழிக்கோடு மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் பதினைந் தாயிரத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள் ளன. தொழில்துறையில் பின்தங்கிய காசர்கோடு, இடுக்கி மற்றும் வயநாடு மாவட்டங்களில் மட்டும்  10,000க்கும் குறைவான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், இந்த மாவட்டங் களும் இத்திட்டத்தில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தி உள்ளன. இந்த காலகட்டத்தில், விவ சாயம்-உணவு பதப்படுத்துதல் துறையில் 40,622 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 16,129 நிறுவனங்களைத் தொடங்கி ரூ.963.68 கோடி முதலீடு செய்யப் பட்டுள்ளது. ஆயத்த ஆடை மற்றும் துணி- நூல் உற்பத்தி துறையில் 22,312 வேலைவாய்ப்புகள் உரு வாக்கப்பட்டுள்ளன. இந்தத் துறையில் 10,743 நிறுவனங்கள் மற்றும் ரூ.474 கோடி முதலீடுகள் உரு வாக்கப்பட்டுள்ளன. மின்சாரம் மற்றம் மின்னணு துறையில் 4014 நிறுவனங்கள் மூலம் ரூ.241 கோடி முதலீடு மற்றும் 7,454 வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. சேவைத் துறையில் 7048 நிறு வனங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இந்தத் துறையில் ரூ.428  கோடி முதலீடு மற்றும் 16,156 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள் ளன. பெரும்பாலான வேலை வாய்ப்புகள் வர்த்தகத் துறையில் உருவாக்கப்பட்டன. அதன்படி 29,428  நிறுவனங்களில் 54108 வேலை வாய்ப்புகளை வழங்க ரூ.1652 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 30ஆம் தேதி முதல்வர் பினராயி விஜயன் தொழில்முனைவோர் ஆண்டை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, தொழில்முனைவோர் ஆண்டின் பல்வேறு செயல்பாடு களை வழிநடத்த மாநில, மாவட்ட மற்றும் உள்ளூர் நிறுவன மட்டங் களில் குழுக்கள் அமைக்கப்பட்டன. உள்ளாட்சித் துறையில் ஒரு லட்சம்  தொழில் தொடங்குவதை உறுதிப் படுத்த அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் 1,153 தொழில் தகுதி வாய்ந்த பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் உள்ள அனைத்து உள்ளூர் சுய-அரசு நிறுவனங்களும் திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் உதவி மையம் (ஹெல்ப் டெஸ்க்)  மூலம் பயிற்சி மற்றும் சேவைகளை வழங்குகின்றன. அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் ஹெல்ப் டெஸ்க் முறை அமல் படுத்தப்பட்டுள்ளது. அனைத்து தாலுகா தொழில் மையங்கள் மற்றும் மாவட்ட தொழில் மையங்களிலும் ஊக்குவிப்பாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். முதலீட்டுக்குச் சாதக மான அரசாங்கத்தின் நடவடிக்கை கள், தொழில்முனைவோராக அடி யெடுத்து வைக்கத் தயங்கி யவர்களும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாற உதவியுள்ளன. ஓராண்டில் ஒரு லட்சம் தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதே இத்திட்டத்தின் குறிக்கோளாக இருந்தாலும், அதைவிட உயர்ந்த  சாதனைகளை நிகழ்த்த முடியும் என்பதை தற்போதைய புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. மீத முள்ள 130 நாட்களுக்குள் தொழில் முனைவோர் ஆண்டு மூலம் கேரளா வின் தொழில் வரலாற்றில் இணை யற்ற சாதனையை எட்ட முடியும் என அமைச்சர் பி.ராஜீவ் தெரிவித்தார்.