அகமதாபாத்:
குஜராத் சுகாதாரத் துறையில் இருக்கும் காலிப் பணியிடங்கள் தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான அறிக்கை குறித்து, மாநில அரசிடம் குஜராத் உயர்நீதிமன்றம் அண்மையில் விளக்கம் கேட்டிருந்தது. விஜய் ரூபானி தலைமையிலான மாநில பாஜக அரசும் அதற்கு விளக்கம் அளித்திருந்தது.ஆனால், பாஜக அரசு அளித்தஅந்த விளக்கம் தவறான தகவல் களைக் கொண்டிருப்பதாக வழக்கறிஞர் கே.ஆர். கோஷ்டி என்பவர்அண்மையில் குற்றம் சாட்டியுள் ளார். இதுதொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றத்தில், பிரமாணப் பத்திரம்ஒன்றையும் அவர் தாக்கல் செய் துள்ளார்.
“குஜராத் மாநில மக்கள்தொகையில் 68 சதவிகிதம் பேர் கிராமப் புறங்களில்தான் வசிக்கின்றனர். 32 சதவிகிதம் பேர்கள் மட்டுமே நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். ஆனால்,குஜராத்தில் இருக்கும் மருத்துவர் களில், 80 சதவிகிதம் பேர் நகர்ப்புறங்களிலும், வெறும் 20 சதவிகிதம் பேர் மட்டுமே கிராமப்புறங்களிலும் பணி அமர்த்தப்படுகின்றனர்.கிராமப்புறங்களிலுள்ள சுகாதார மையங்களில் சிறப்பு மருத்துவர்களுக்கான பணியிடங்கள் 90 சதவிகிதம் அளவிற்கு காலியாக உள்ளன. மருத்துவக் கண்காணிப்பாளர் பணியிடங்களில் 88 சதவிகிதம் நிரப்பப்படவில்லை. இதேபோல ‘நிலை 1’ சிறப்பு மருத்துவர் பணியிடங்களில் 80 சதவிகிதமும், ‘நிலை 2’ மருத்துவ அதிகாரிகள் பணியிடங்களில் 19 சதவிகிதமும், ‘நிலை 2’ பல் மருத்துவப் பணியிடங்களில் 24 சதவிகிதமும் நிரப்பப்படாமல் காலியாகத்தான் உள் ளன.
ஆனால், குஜராத் மாநில அரசின் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெயந்தி எஸ்ரவி, இந்த உண்மையான நிலவரங் களை எல்லாம் மறைத்து, நீதிமன்றத்திற்கு தவறான தகவல்களை அளித்துள்ளார்” என்று கே.ஆர். கோஷ்டி தனது அறிக்கையில் குற் றம் சாட்டியுள்ளார்.