states

img

பழங்குடியினரை வெளியேற்றும் விவகாரத்தில் மோதல்... கட்சியிலிருந்து விலகிய எம்.பி.யை கெஞ்சி மீண்டும் சேர்த்த பாஜக....

அகமதாபாத்:
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்றபெயரில், குஜராத் மாநிலத்தில், பழங்குடி மக்களை வனத்திலிருந்து வெளியேற்றும் முயற்சியில் மத்திய பாஜக இறங்கியுள்ளது.குறிப்பாக, குஜராத்திலுள்ள நா்மதா மாவட்டத்தின் 121 கிராமங்களை சுற்றுச்சூழல் உணர் திறன் மண்டலமாக (eco-sensitive zone) சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்ற அமைச்சகம் (Ministry of Environment, Forest and Climate Change notification) அறிவித்துள்ளது.

இதற்கு எதிர்க்கட்சிகளிடம் மட்டுமன்றி, பாஜக-வுக்கு உள்ளேயே எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக, பழங்குடி வகுப்பைச் சேர்ந்த தலைவரும், பாஜக சார்பில் பரூச் மக்களவைத் தொகுதியில் 6 எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட வருமான மன்சுக் பாய்வாசவா-வும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித் தார். மத்திய அமைச்சகத்தின் அறிவிப்பைத் திரும்பப்பெற உத்தரவிடுமாறு, டிசம்பர் 20-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றையும் அவர் எழுதினார்.

இதேபோல, நர்மதா மாவட்டத்தில் உள்ள ஒற்றுமை சிலைக்குஅருகே உள்ளூர் பழங்குடி மக்கள்,சிறு சிறு கடைகளை நடத்தி வந்தநிலையில், அவற்றை அகற்றுமாறுபிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராகவும் வாசவா குரல் கொடுத்து வந்தார். இந்நிலையிலேயே 63 வயதான வாசவா, பாஜக-விலிருந்துவிலகுவதாக அறிவித்தார். விரைவிலேயே எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்வேன் என்று கூறினார்.

தனது, கடிதத்தில் ராஜினாமாவுக்கான உண்மையான காரணங்களை கூறாத அவர், தான் சிலதவறுகளை செய்வதாகவும், அந்ததவறுகளால் பாஜக-வுக்கு கெட்டபெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே கட்சியிலிருந்து விலகுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், நர்மதா பகுதி சுற்றுச் சூழல் உணா்திறன் மண்டலமாக அறிவிக்கப்பட்டதுதான் வாசவா-வுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்று பாஜக தலைவர் பாட்டீல் உண்மையை போட்டு உடைத்தார். இதனிடையே, புதனன்று மாநில முதல்வர் விஜய்ரூபானி மூலம் சமரச பேச்சுவார்த்தை நடத்திய பாஜக, வாசவாவிடம் கெஞ்சிக் கூத்தாடி அவரின் ராஜினாமாவை திரும்பப்பெற வைத்துள்ளது.

;