states

img

குஜராத்தில் முதல்வராக மீண்டும் பதவியேற்கும் பூபேந்திர படேல்!

குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் வரும் டிசம்பர் 12-ம் தேதி பதவியேற்பார் என பாஜக அறிவித்துள்ளது.

குஜராத் சட்டமன்ற தேர்தல், டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில் 66.31% வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன. இத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 182 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் 37 மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது. இதில், 158 தொகுதிகள் முன்னிலை வகிக்கும் பாஜக, அம்மாநிலத்தில் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. இந்த நிலையில்,  மீண்டும் குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் வரும் டிசம்பர் 12-ம் தேதி பதவியேற்பார் என பாஜக அறிவித்துள்ளது.