states

img

குஜராத்: வீடு இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பலி

குஜராத்தில் வீடு இடிந்து விழுந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த  3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
குஜராத் மாநிலம் பரூச் நகரின் பம்பாகானா பகுதியில் இன்று அதிகாலையில் எதிர்பாராத விதமாக பழைய வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 10 வயது சிறுமி  உள்பட 4  பேர் இடிபாடுகளில் சிக்கினர். விபத்து நடந்த போது அவர்களின் பெற்றோர் வேலைக்கு சென்றிருந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் 4 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு  சென்றனர். அங்கு நிஷா, பிரின்ஸ், அஞ்சனா, ஆகியோர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 
அவரது சகோதரி காயத்ரிபென் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.