உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித் தலைவரான சந்திரசேகர ஆசாத், பீம் சேனை என்னும் அரசியல் அமைப்பை உருவாக்கி இருக்கிறார். அவர் தங்கள் அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கான ஊழியர்களும், தில்லி-காசிபூர் எல்லையில் போராடும் விவசாயிகளுடன் செவ்வாய்க்கிழமையன்று தங்களை இணைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: “இக்கடுங்குளிரிலும் விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும். நாங்கள் போராடும் விவசாயிகளுக்கு எங்கள் முழு ஆதரவினைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தப் போராட்டத்தில் நாங்களும் அவர்களுடன் இணைகிறோம்.”
இவ்வாறு சந்திரசேகர ஆசாத் கூறினார்.
(ந.நி.)