states

img

கல்லூரி பேரவைத் தேர்தலை நடத்தச் சொல்வது குற்றமா? இதற்காகவா, 6 பேர் மீது தேசவிரோத வழக்கு? மாணவர்கள் கேள்வி

லக்னோ:
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியா மாவட்டத்திலுள்ள கே.எஸ். சாகேட் டிகிரி (K.S. Saket Degree College) அரசுக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள்சுமித் திவாரி, ஷேஷ் நாராயண் பாண்டே, இம்ரான் ஹாஷ்மி, சாத்விக் பாண்டே, மோஹித் யாதவ், மனோஜ் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தேசவிரோத வழக்கு (Sedition)தொடரப்பட்டது.

இந்த மாணவர்கள் தேசவிரோத முழக்கங்களை எழுப்பினார்கள் என்று கல்லூரியின் முதல்வரே அளித்த புகாரின் பேரின்இந்திய தண்டனைச் சட்டம்124-A,147 மற்றும் 506 ஆகிய பிரிவுகளில்வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.இந்த நடவடிக்கைக்கு பல் வேறு தரப்பில் கண்டனங்கள் எழுந்த நிலையில், கல்லூரி முதல்வர் என்.டி. பாண்டே, தானாகவே ஆஜராகி பேட்டி ஒன்றை அளித்தார். அதில், “கல்லூரி வளாகத்தில் தேச விரோத முழக்கங்கள்எழுப்பப்பட்டு வருகின்றன. ராமஜென்மபூமி இடம் அருகில் இருக்கும் இடத்தில், தில்லி ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் எழுப்பப்படும் ‘விடுதலை’ முழக் கங்களை (azadi) நான் எப்படி இங்கு அனுமதிக்க முடியும்?” என்று ஆவேசப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கல்லூரி முதல்வர் பாண்டேவின் அவதூறுகளுக்கு, முன்னாள் மாணவர் பேரவைத் தலைவர்களில் ஒருவரானகிருஷ்ணா யாதவ் பதிலளித்துள்ளார். அதில், கல்லூரி பேரவைத் தேர்தலை நடத்துமாறு கூறியதற்காகவே மாணவர்கள் மீது தேசவிரோத வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.10 ஆயிரம் பேர் பயிலும் மிகப்பெரிய கல்லூரியில், 2 ஆண்டுகளாக மாணவர் பேரவைத் தேர்தல்நடத்தவில்லை. கடந்த ஆண்டு ராமர் கோயில் விவகாரம் காரணமாக தேர்தல் இல்லை என் றார்கள், மாணவர்களும் சரி என்றுஒப்புக்கொண்டார்கள். ஆனால், இப்போது வகுப்புகள் நடக்கும் போது, பேரவைத் தேர்தலை நடத்துவதில் என்ன சிக்கல்? இதுபற்றியே மாணவர்கள் கேள்வி எழுப்பினார்கள். அப்போது, கல்லூரி முதல்வரிடமிருந்தும் தான் விடுதலை வேண்டும் என்று கோஷமிட்டார்கள். ஆனால், முதல்வரோ அதனை தேசவிரோதம் திரித்துக் கூறுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

;