states

img

உத்திரபிரதேசம்: அம்பேத்கர் சிலை சேதம்

உத்திரபிரதேச மாநிலத்தில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
உத்திரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டம் மணியார் பகுதிக்கு அருகே பகிப்பூர் என்ற கிராமத்தில் இருந்த அம்பேத்கர் சிலை சேதமடைந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணியார் பகுதி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் அம்பேத்கர் சிலை கீழே விழுந்தது கிடந்ததாக தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இதைத்தொடர்ந்து அப்பகுதியில் புதிய சிலை மாற்றப்பட்டதாக தெரிவித்தார்.