states

img

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரியானா முதல்வர் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம்

மோடி அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் வீட்டின் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மோடி அரசு கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தலைநகர் தில்லியை முற்றுகையிட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 40க்கும் மேற்பட்டோர் போராட்டக்களத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பல மாநிலங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
இந்நிலையில் மோடி அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அரியானா மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் பிரதேச காங்கிரஸ் சேவா தளத்தை சேர்ந்தவர்கைள் முதல்வர் மனோகர் லால் கட்டர் வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.