கவுகாத்தி, மார்ச் 27- அசாம் மாநிலம் பார்பேடா தொகுதியில் காங்கிரஸ் வேட்பா ளரை நிறுத்த வேண்டாம் என்று அம்மாநிலத்தைச் சேர்ந்த 75 அறிஞர்கள் கோரிக்கை விடுத்தி ருக்கிறார்கள்.
அசாம் மாநிலத்தில் இந் தியா கூட்டணிக் கட்சிகளுக்கி டையில் தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை. பல கட்டப் பேச்சு வார்த்தைகள் நடந்தும் தொகுதி களைப் பிரிக்க காங்கிரஸ் முன் வராததால், பாஜகவுக்கு எதி ரான அணி பலவீனமடைந்துள் ளது. பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே சில தொகுதிகளுக்கு காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்களும் அறி விக்கப்பட்டார்கள். பார்பேடா தொகுதியில் அம்மாநிலத்தின் சேவா தளத் தலைவர் தீப் பயன் காஙகிரஸ் சார்பில் நிறுத்தப் பட்டுள்ளார்.
பார்பேடா தொகுதி பாரம்பரி யமாக இடதுசாரிக் கட்சிகள், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் செல்வாக்கு மிகுந்ததாகும். இந்த மக்கள வைத் தொகுதியில் ஏற்கனவே இரண்டு முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலை வர்களில் ஒருவரான உத்தப் பர்மன் வெற்றி பெற்றிருக்கிறார். தற்போதும் சோர்போக் தொகுதி யின் சட்டமன்ற உறுப்பினரான மனோரஞ்சன் தாலுக்தார், கட்சி யின் வேட்பாளராகக் களம் இறங்கியுள்ளார்.
பாஜகவை எதிர்த்து வெற்றி பெற, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரை ஆத ரிக்க வேண்டும் என்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த 75 அறி ஞர்கள் கோரிக்கை வைத்தி ருக்கிறார்கள். வெற்றியை உறுதி செய்யும் வகையில், தனது வேட்பாளரை காங்கிரஸ் திரும்பப் பெற வேண்டும் என் றும் கோரியுள்ளனர்.