science

img

நிலவுக்கு மிக அருகில் வியாழன், வெள்ளி கோள்கள்!

வெள்ளி மற்றும் வியாழன் ஆகிய இரு கோள்களும், நிலவும் இன்று ஒரே நேர்கோட்டில் மிக அருகில் சந்திக்க உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
வானில் கடந்த 21, 22-ஆம் தேதிகளில் வெள்ளி, வியாழன் மற்றும் நிலவு ஒரே நேர்கோட்டில் காணப்பட்டது. இந்த நிலையில், இன்றும் வானில் வெள்ளியும், வியாழனும் மிக அருகில் வருவதை காண முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு கோள்களும் வானத்தில் வெறும் 0.5 டிகிரி அளவு இடைவெளியில் இருக்கும். இதுபோன்ற மிக அரிதான காட்சியை மாலை 6 மணி முதல் 8 மணி வரை மக்கள் வெறும் கண்களால் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

;