science

img

விழியில் தெரியும் இதயத்தின் ஆரோக்கியம்

சிதம்பரம் இரவிச்சந்திரன்

எளிய கண் பரிசோதனை மார டைப்பு ஏற்படும் ஆபத்தை முன்கூட்டியே கண்டறிய உதவும் என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. விழித்திரையில் இருக்கும் இரத்தக் குழாய்கள் அமைந்திருக்கும் பாணி வருங்காலத்தில் இதயக்கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புகள் பற்றி தெரிவிக் கிறது. இதய நலம் தொடர்பான ஒவ் வொரு நிலையும் தனிப்பட்ட விழித் திரை அமைப்பைக் கொண்டிருப்ப தாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இந்தப் பரிசோதனைக்காக கண்ணிற் குள் ஊடுருவல் எதையும் செய்ய வேண்டியதில்லை. வியன்னாவில் நடந்த ஐரோப்பிய மனித மரபணு மாநாட்டில் இந்த ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டது. ஆய்விற்காக யு கே உயிரி வங்கியில் (Bio bank) 500,000 பேரின் வாழ்க்கை முறை மற்றும் மருத்துவ ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த செயல் முறை பகுதியளவு பரிமாணம் (fractal dimention) எனப்படுகிறது. இந்த விவ ரங்கள் பின்னர் வயது, பாலினம், சிஸ் டாலிக் இரத்த அழுத்தம், உடற்பருமன் அளவு, மற்றும் புகை பிடித்தல் போன்ற பழக்கங்களுடன் இணைத்து ஆராயப்பட்டது. ஆய்வு செய்யப்பட்ட வர்களில் ஏற்கனவே மாரடைப்பு (myocardial infarction M I) ஏற்பட்ட வர்களும் அடங்குவர். நடைமுறையில் இருக்கும் மக்கட்தொகை அடிப்படையிலான ஆய்வுகள் மூலம் கண்டறியும் முறை யைக் காட்டிலும் விழித்திரைப் பரிசோதனை முறை மிக எளியது. சுலப மானது. இதய நலம் பற்றி அறிய பேருத வியாக அமையும் என்று ஆய்வுக்கட்டு ரையை வழங்கிய அதன் ஆசிரியர் மற்றும் எடின்பரோ பல்கலைக்கழக அஷர்&ராஸ்லின் (Usher and Roslin) ஆய்வுக்கழக முனைவர் பட்ட மாணவி அனா வில்லாபிளான விலாஸ்கோ (Ana Villaplana-Velasco)கூறுகிறார். இவற்றுடன் நபர்களின் மரபணுத் தொடர்பு பற்றிய விவரங்களும் சேர்க் கப்பட்டால் சிறந்த பலன் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. பகுதியளவு பரிணாமத்திற்கும் மாரடைப்பிற்கும் இடையில் மரபணு தகவல்கள் பரிமாறப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. மாரடைப்பு ஏற்படக்கூடிய சராசரி வயது அறுபது. இந்த ஆய்வுகள் மாரடைப்பு ஏற்படு வதற்கு ஐந்தாண்டுகள் முன்னதாகவே அது பற்றி பாதிப்பிற்கு உள்ளாகும் ஆபத்து உள்ளவர்களை எச்சரிக்க உதவும். ஐம்பது வயதிற்கும் மேற்பட்டவர் களுக்கு மருத்துவர்கள் இதன் மூலம் முன்கூட்டியே மாரடைப்பு வரும் அபாயம் குறித்து முன்னெச்சரிக்கை செய்து புகை பிடித்தலை கைவிடுதல், கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத் தத்தை சீராகப் பராமரிப்பது போன்ற ஆலோசனைகளை வழங்கமுடியும் என்று நம்பப்படுகிறது.

தனிச்சிறப்புமிக்க  விழித்திரை விவரங்கள்
இதய நலம் குறித்த ஒவ்வொரு நிலையும் விழித்திரையின் இரத்தக் குழாய் அமைப்பில் வேறுபாடுகளைக் கொண்டுள்ளன என்று ஆய்வாளர் கள் நம்புகின்றனர். இது இதய நலம் தவிர மற்ற நோய்களைக் கண்டறிய உத வும் என்று கருதப்படுகிறது. அதனால் ஆண் மற்றும் பெண்கள் இடையில் இந்த ஆய்வுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் பாலின வேறுபாடுகளால் பரிசோதனை முடிவுகள் எவ்வாறு மாறுபடுகின்றன என்பதை அறிய முடியும். இப்புதிய பரிசோதனை முறை பற்றி மேலும் தீவிர ஆய்வுகள் நடைபெற வேண்டும் என்று பிரிட்டிஷ் இதய நல அறக்கட்டளை மருத்துவ இயக்குனர் பேராசிரியர் சர் நிலேஷ் சமானி (Prof Sir Nilesh Samani) கூறுகிறார். இதை வழக்கமான இதய பரிசோதனைகளுடன் இணைத்து மேற்கொள்ளவேண்டும்.  மனித கண் விழித்திரை நேரடியாக இரத்தக்குழாய்கள் மற்றும் இரத்தத் திசுக்கள் பற்றிய தகவல்களை வழங்கு கிறது. இது இப்பரிசோதனையை மேலும் நடைமுறை சாத்தியமாக்க உதவும் என்று லண்டன் இம்பீரியல் கல்லூரி மரபணு மருத்துவப் பிரிவு ரீடர் மற்றும் மருத்துவ ஆய்வுக் கவுன்சில் உறுப்பினர் இதய நிபுணர் டாக்டர் ஜேம்ஸ் வேர் (Dr James Ware) கூறுகிறார். கணினித் தொழில்நுட்பம் (computer vision) மற்றும் இயந்திரக் கற்றல் (machine learning) ஆகியவை இதயத்திசுக்களின் ஆரோக்கியம் பற்றிய பரிசோதனைகள் மூலம் வருங் காலத்தில் ஏற்படக்கூடிய மாரடைப்பு பற்றி முன்னறிவிப்பு செய்ய உதவு கிறது. இப்போது கண்டுபிடிக்கப்பட் டுள்ள இந்தப் புதிய முறை இத்துறை யில் பெரும் மாற்றத்தை கொண்டுவரும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

;