science

img

அறிவியல் கதிர்

1) தேவை மன நலமே 
அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாயிட் வெள்ளை இன  காவல் அதிகாரியின் கையில் இறந்தபிறகு ‘கருப்பர் உயிர் பொருட்படுத்து ‘என்கிற இயக்கம் எழுந்தது.இதன் பின்விளைவாக ‘STAR’ (Support Team Assisted Response) என்கிற திட்டத்தை அமெரிக்காவின் பல நகர் மன்றங்கள் செயல்படுத்தின. இந்த திட்டத்தின் கீழ் காவல்துறைக்கு வரும் வன்முறை வகையில் சேராத சிலவகை அவசர அழைப்பிற்கு ஒரு மனநல மருத்துவரும் உதவியாளரும் அனுப்பப்படுவர். 
 ‘ஒவ்வொரு சமூக பிரச்சினைக்கும் காவல்துறை நடவடிக்கை தீர்வாகாது’ என்கிறார் கனடா நாட்டு அல்பெர்ட்டா எட்மான்ட்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த  சமூகவியலாளர் டெமிடோப் ஓரியாலா.
பொதுமக்கள் அவதிக்குள்ளாகும்போது காவல்துறை தலையிடுவதால் ஏற்படும் அழுத்தங்களை இதுவும் இதை போன்ற மற்ற திட்டங்களும் குறைக்கிறதாம்.போலீஸ் தலையீடு குறைக்கப்பட்டால் குற்றங்கள் அதிகரிக்கும் என்று இதன் விமர்சகர்கள் கூறுகின்றனர்.ஆனால் இந்த திட்டத்தின் சோதனை முயற்சி காலத்தில் வன்முறை குற்றங்கள் அதிகரிக்கவில்லை என்பதை ஆய்வாளர்கள்  கண்டுள்ளார்கள். மாறாக சிறு குற்றங்கள் கணிசமாக குறைந்துள்ளன. அதற்கு காரணம் இதில் செயல்படும் மருத்துவர்கள் குற்றப் பதிவு செய்வதோ கைது செய்வதோ இல்லை என்பதே.’கைது செய்யப்படுவதற்குப் பதிலாக அவருக்கு உடல்நல சிகிச்சை அளிக்கப்படுவதே சிறப்பானது’ என்கிறார் ஷ்டான்போர்ட் பல்கலைக்கழக பொருளாதார அறிஞர் தாமஸ் டீ. ஜூன் 2020 இலிருந்து நவம்பர் 2020 வரை நடத்தப்பட்ட ஆய்வில் ஸ்தான்போர்ட் காவல் சரகத்திலுள்ள 8 காவல் நிலையதிற்கு வந்த அவசர அழைப்புகளில்  அத்துமீறி நுழைதல்,ஆபாசமாக நடந்து கொள்ளுதல்,குடி போதை போன்ற சிறு மற்றும் வன்முறை சாராத குற்றங்கள் ஸ்டார் செயல்பாட்டாளர்களுக்கு அனுப்பப்பட்டன. மொத்தம் 748 அழைப்புகளுக்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஸ்டார் திட்டம் செயல்பட்ட காவல் நிலைய குற்ற எண்ணிக்கை மற்ற காவல் நிலைய எண்ணிக்கையுடன் ஒப்பிடப்பட்டது.வன்முறை குற்றங்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை.ஆனால் சிறு குற்றங்களின் எண்ணிக்கை ஸ்டார் திட்ட பகுதிகளில் 34% குறைந்து காணப்பட்டது. இப்படிப்பட்ட ஆய்வுகள் முக்கியம் என்றாலும் கொரோனா காலத்தில் அதுவும் ஒரே ஒரு ஆய்வை  மட்டும் வைத்து உறுதியான முடிவுகளை எடுக்க முடியாது என்கிறார் சட்டவியலாளர் மைக்கேல் வெர்மீர். குற்றங்களின் எண்ணிக்கை குறையாவிட்டாலும் பொருளாதார அடிப்படையில் இத்திட்டங்கள் சிறந்தவை. ஒரு குற்ற செயலில்  குற்றவியல் நீதி முறையில் நடவடிக்கை எடுப்பதற்கு 600 டாலர்கள் செலவாகும்போது ஸ்டார் திட்டத்தின் கீழ் 150 டாலர்கள்தான் செலவாகுமாம். மேலும் காது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்புவதற்குப் பதிலாக மனநல சிகிச்சை அளிக்கப்படுவதால்  அவர்கள் தங்கள் பணியில் தொடரவும் குடும்பத்தினருடன் வாழ்வதும் சாத்தியப்படுகிறது.ஆகவே ஆய்வாளர்கள் என்கிற முறையில் குற்றங்களின் எண்ணிக்கை குறைவதை மட்டுமல்லாமல் மக்கள் நலன் என்கிற அடிப்படியில் இதை அணுக வேண்டும் என்கிறார் கொலரோடா பல்கலைக் கழகத்தை சேர்ந்த சமூகவியலாளர் பிரெண்டன் பெக்.

                                                                               ♦   ♦    ♦

2) தங்கமே தங்கம் 
பரவலாக பயன்படுத்தப்படும் ஆன்டி பயாட்டிக் மருந்துகளுக்கு நுண்கிருமிகள் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொண்டுள்ளன.இவற்றின் பெருக்கம் அபாயகரமான அளவை எட்டியுள்ளது.இவற்றை அழிப்பதற்கு வேதிப்பொருட்கள் அடங்கிய தங்க நானோ துகள்கள் பயன்படலாம் என்கிறது ஒரு ஆய்வு.அதே சமயம் இந்த முறையானது ஊம்பியின் செல்களை அழிந்துவிடக்கூடாது. சீனாவின்   ஷென்ஸென் நகரிலுள்ள அறிவியல் தொழில் நுட்பக்க கழகத்தை சேர்ந்த ஆய்வுக்கு குழுவினர் இரண்டு இழைகள் கொண்ட தங்க நானோ துகள்கள் கொண்ட புதிய முறையை காட்டியுள்ளனர்.ஒரு இழை நேர் மின்னேற்றம்  கொண்டது.பேக்டீரியாவின் செல்கள் எதிர் மின்னேற்றம்  கொண்டதால்  அதை நோக்கி இவை கவரப்படும்.மற்றோரு இழை பாலூட்டிகளின் செல் மேற்பரப்பிலுள்ள வேதி பொருட்களை ஒத்திருப்பதால் அவை சிறுநீரகம் வழியாக வெளியேற்றப்படும்.இரண்டு இழைகளின் சமன்பாட்டை தகுந்த அளவில் வைத்து எலிகளில் சோதனை செய்ததில் மருந்து எதிர்ப்பு சக்தி கொண்ட நுண்கிருமிகளை அழிப்பதுடன் திசுக்களுக்கு நீண்ட கால நச்சு தன்மை ஏற்படாமலும் இருப்பது காணப்பட்டது. 

                                                                                ♦   ♦    ♦

3) புதிய செமி கண்டக்ட்டர் 
மின்னணு மற்றும் ஒளி மின்னணுக் கருவிகளுக்கு தேவையான பாலிமர் செமி கண்டக்டர் தயாரிக்க புதிய முறை ஒன்றை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தாமிரம் மற்றும் துத்தநாக த சையனேட் எனும் கூட்டுப் பொருட்களை  மில்லிங் எனும் முறையில் சேர்க்கும்போது இரண்டு பாலிமர் உருவாகின்றன. தாய்லாந்தை சேர்ந்த வித்யாசிறுமேதி அறிவியல் தொழில்நுட்பக் கழகத்தை சேர்ந்த அறிவியலாளர்கள் இதைக் கண்டறிந்துள்ளனர். தாமிரமும் துத்தநாகமும் சேர்க்கப்படும் விகிதத்தை மாற்றுவதன் மூலம்  இந்த பாலிமர்களின் ஒளி மற்றும் மின் பண்புகளை  சீர் படுத்த முடியும் என்கிறார்கள்.
 

                                                                                  ♦   ♦    ♦

4) அழகும்  பாதுகாப்பும் 
பூச்சிகளின் இறக்கைகளின் வால் நுனியானது அழகான அலங்காரம் மட்டுமல்ல அவை பதுகாப்பு உறுப்புகளாகவும் பயன்படுகிறதாம்.அவைகளை தாக்க வரும் பறவைகளின் கவனத்தை வாலின் மீது திருப்பி வண்ணத்துப் பூச்சியின் முக்கிய அவயங்களின் மீது தாக்காமல் காக்கிறது. பல்வகை அந்துப் பூச்சிகள் மற்றும் வண்ணத்துப் பூச்சிகள் பல முறை பரிணாம முறையில் தங்கள் இறக்கைகளை வளர்த்துக் கொண்டுள்ளன என்பதை இந்த ஆய்வு விளக்கலாம்.    பாரிசிலுள்ள இயற்கை வரலாற்று தேசிய அருங்கட்சியகத்தை சேர்ந்த பரிணாம உயிரியியலாளர் அரியேன் கோட்டார்ட்( Ariane Chotard) குழுவினர் 2020 கோடைகாலத்தில் குருவிவால் வண்ணத்துப் பூச்சிகளை சேகரித்தனர். இந்தப் பூச்சிகள் இரண்டு கரு நிற வால்களும் அவற்றில் ஊதா மர்ரும் ஆரஞ்சு வன்னப் புள்ளிகலும் கொண்டுள்ளன. அவற்றின் மஞ்சள் கோடுகள் உடலிலிருந்து இவை வெறுபடுத்திக் காட்டுகின்றன.  இவற்றின் பெரும்பான்மையான வால்கள் சேதமடைந்திருந்தன.இவற்றை வேட்டையாடும் பறவைகள் இந்தப் பகுதியை தாக்கியிருக்கின்றன என்ரு தெரிகிரது.இதை மெய்ப்பிக்க  கூண்டிலடைக்கப்பட்ட காட்டுப் பறவைகளிடம் செயற்கையாக உண்டாக்கப்பட்ட வண்ணத்துப் பூச்சிகள் காட்டப்பட்டன.அவற்றின் வால்கள் மட்டும் உண்மையானவை.பறவைகள் அவற்றை தாக்குவது படமாக்கப்பட்டது. கணக்கிடப்பட்ட 59 தாக்குதல்களில் 79% வண்ணத்துப் பூச்சியின் பின் இறகுகளிலேயே இருந்து.39% வால்களிலும் இறகுகளிலும் சேர்ந்து காணப்பட்டன.

                                                                                  ♦   ♦    ♦

;