science

img

அறிவியல் கதிர் - தொகுப்பு : ரமணன்

1. இஸ்ரோ தயாரிக்கும் விண்வெளி உடை 

இஸ்ரோ முதன் முதலாக விண்வெளிக்கு மனிதர்களைஅனுப்பும் திட்டம் ‘ககன்யான்’ என்றழைக்கப்படுகிறது.இதுரூ10000/  கோடி திட்டமாகும். இதில்பயன்படுத்துவதற்காகஇஸ்ரோ சொந்தமாக விண்வெளி உடைகளை (spacesuits) வடிவமைத்துவருகிறது. ஆரஞ்சு வண்ண உடைகள்தான் பழக்கத்தில் இருந்தது.அதைத்தான் நாசாவும் பயன்படுத்தியது.ஆனால் இந்தியா தனது சொந்த உடைகளை வடிவமைக்க தொடங்கியுள்ளது என்கிறார் நாசா-ஹனிவெல் விண்வெளி கல்வித் திட்ட கல்வியாளர் அபூர்வா ஜகதி.அவர் மேலும் சொல்லும்போது .ஒரு விண்வெளி உடை தயாரிக்க சாதாரணமாக ஒரு பில்லியன் டாலர் செலவாகும் என்கிறார்.

2. விண்வெளியில் ரசிய ரோபோ

ஆகஸ்ட்22ஆம் தேதி ரசியா மனித வடிவ ரோபோ ஒன்றை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.சர்வ தேச விண்வெளி நிலையத்தில்பத்துநாட்கள் தங்கி அங்குள்ளவிண்வெளிவீரர்களுக்கு உதவுவது குறித்த பயிற்சியை இதுஎடுத்துகொள்ளும். பெடர்(குநனடிச,) எனப் பெயரிடப்பட்ட இது தான் ரசியா அனுப்பும் முதல் ரோபோ ஆகும்.சோயுஸ் ஆளு-14 என்றராக்கெட்டில்இந்த ரோபோ அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.சோயுஸ் ராக்கெட்டுகள் சாதாரணமாக மனிதர்களாலேயே இயக்கப்படும்.ஆனால் அவசர மீட்பு குறித்த சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளஇதில் மனிதர்கள் யாரும் அனுப்பப்படவில்லை.விண்வெளி வீரர்களுக்குப் பதிலாக விமானிஓட்டி இருக்கையில் கையில் ரசிய கொடியுடன் பெடர் அமர்த்தப்பட்டிருந்தது.ராக்கெட் புறப்படும் சமயத்தில் யூரி ககாரின் சொன்ன பிரபல வார்த்தைகளான ‘நாம் போகலாம்;நாம் போகலாம் ’என்ற வார்த்தைகளை இந்த ரோபோ சொல்லியது.இது5 அடி11அங்குலம் உயரமும் 160கிலோ எடையும் கொண்டது. தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாட்டில்களை திறப்பது போன்ற புதிய வேலைகளை தான் கற்றுக்கொண்டிருப்பதாகக் கூறியது.விண்வெளி நிலையத்தில் இது போன்ற வேலைகளை அது மிகக் குறைந்த புவி ஈர்ப்பு விசையில் செய்து பார்க்கும்.இதுஸ்குரு டிரைவர்,ஸ்பானர் போன்றவற்றைக் கொண்டு மின் கம்பிகளை இணைப்பது, பிரிப்பது, தீ அணைப்பனை இயக்குவது போன்ற வேலைகளுக்கு உதவும் என்கிறார் ரசிய விண்வெளி திட்ட இயக்குனர் அலெக்சாண்டர் புளோஷேன்கோ.விண்வெளிக்குசெல்லும் முதல் ரோபோ பெடர் இல்லை.இதற்கு முன் 2011ஆம் ஆண்டு ரோபோநாட் எண்டும் ரோபோவை நாசா அனுப்பியது.ஆனால் தொழில்நுட்ப பிரச்சினைகளினால் அது திரும்ப கொண்டுவரப்பட்டுவிட்டது.2013இல் ஜப்பான் கிரோபோ எனும் சிறிய ரோபோவை அனுப்பியது.அது ஜப்பானிய மொழியில் பேசவும் செய்தது.(ஆளுசூ சூநுறுளு)

3.கேரளாவில் விண்வெளிப் பூங்கா

கேரளா அரசும் இஸ்ரோவும் இணைந்து திருவனந்தபுரத்தில் விண்வெளிப் பூங்கா ஒன்று அமைக்க உள்ளன. இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மா இந்த திட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். தொழில் நுட்ப கல்வி அறிவு கொண்ட மனித வளம் இருப்பதால் விண்வெளித் துறையில் கேரளாவிற்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார்.திருவனந்தபுரத்தில் ஏற்கனவே உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்,திரவ உந்துபொருள் மையம்,இந்திய விண்வெளி அறிவியல் தொழில் நுட்ப கல்வி நிறுவனம் ஆகியவை விண்வெளி பூங்கா அமைய உதவிகரமாக இருக்கும் என்று முதலமைச்சர் பினராய் விஜயன் கூறுகிறார்.விண்வெளி துறைக்குத் தேவையான சிக்கலான பாகங்களை இந்தப் பூங்காவில் குறைவான செலவில் தயாரிக்கமுடியும் என்பதால் விண்வெளி பொருட்கள் சந்தையில் அது பங்கு பெறமுடியும் என்றும் அவர் கூறினார்.  முதலமைச்சரின் அறிவியல் ஆலோசகர்,தகவல் தொழில் நுட்பத் துறை செயலாளர்,கேரளா விண்வெளி பூங்கா சிறப்பு அதிகாரி,விக்ரம் சாராபாய் இயக்குனர்,இந்திய விண்வெளி அறிவியல் தொழில் நுட்ப கல்வி நிறுவன இயக்குனர் ஆகியோர் இந்த சந்திப்பின்போது உடனிருந்தனர்.

(தி இந்து ஆங்கில நாளிதழ்-30/08/19)

4.அறிவியலைத் தூண்டும் ஒரிகாமி

ஹார்வர்ட் மற்றும் கால்டெக் ஆய்வாளர்கள் தானாக மடங்கி விரியும் ரோபோக்களை வடிவமைத்திருக்கிறார்கள்.‘ரோல்போட்’என்றழைக்கப்படும் இவைகள் வெப்பத்தின் மூலம்இயக்கப்படுகிறது. கடினமான உலோகங்களால் உண்டாக்கப்படும் ரோபோக்களுக்கு மாறாக உள்ள இந்த மென்ரோபோக்கள் ஜப்பானிய கலையான ஒரிகாமியினால்ஊக்குவிக்கப்பட்டதாம்..வெளிதூண்டுதல்களுக்குஏற்பதங்கள்வடிவத்தைமாற்றவும்நகரவும்இதனால்செய்யமுடியும்.இதனால்முழுவதும் இணைப்பு இல்லாத மென் ரோபோக்கள் உண்டாக்க வழி பிறந்துள்ளது. ஒளி, அமில காரத்தன்மை(யீழ),ஈரப்பதம் போன்ற காரணிகளால்எதிர்கால ரோபோக்களை கட்டுப்படுத்த முடியும் என்று ஹார்வர்ட் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்

5.வேதியியல் அட்டவணையில் மூலகங்களின் மாதிரிகள்

    இந்த ஆண்டு ரசிய விஞ்ஞானி ட்மிடிரி மெண்டெலீவ் (Dmitri Mendeleev) வேதியியல் அட்டவணையை (periodic table) கண்டுபிடித்த150வதுஆண்டாகும். இந்த நேரத்தில் சில நிறுவனங்கள் மூலகங்களின் மெய்மாதிரிகளைக் கொண்ட வேதியியல் அட்டவணையை விற்பனை செய்துவருகின்றனவாம்.அக்ரிலிக் உறைக்குள் அழகாகவும் பாதுகாப்பாகவும் மூலகங்களின் மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளனவாம். சிலவற்றில் அந்தந்த மூலகங்களின் அணுஎண், எடை, ஆக்சிடேஷன்,ஆர்பிட்டல்ஸ், ஐசோடோப்ஸ் போன்ற விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளனவாம்.பெரும்பாலான அட்டவணைகளில்  டெக்னீஷியம்,புரோமெத்தியம் போன்ற அரிதான கதிர்வீச்சு உள்ள மூலகங்களும் அதேபோல் பொலோனியத்திலிருந்து ஒகநேசோன் (Oganesson)வரை(யுரேனியம்,தோரியம் தவிர)உள்ள மூலகங்களும் வைக்கப்படுவதில்லை


 


 

;