science

img

அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடுவதில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம்

உலக அளவில் அறிவியல் மற்றும் பொறியியல் கட்டுரைகள் வெளியிடுவதில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.  

அமெரிக்காவின் தேசிய அறிவியல் அமைப்பு வெளியிட்ட தகவலின் படி, உலகளவில் கடந்த 2008-ஆம் ஆண்டில் 1,755,850 அறிவியல் ஆய்வு கட்டுரைகள் வெளியிடப்பட்டன. இதுவே 2018-ஆம் 2,555,959 அறிவியல் ஆய்வு கட்டுரைகள் வெளியிடப்பட்டன.  உலகளாவிய ஆய்வுக் கட்டுரைகள் வெளியீடு, கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டுதோறும் நான்கு சதவீதம் என்ற அளவில் வளர்ந்துள்ளது. அறிவியல் கட்டுரைகள் வெளியிடுவதில், சீனா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது. இந்தியாவில் கடந்த 2008-ல் 48,998 அறிவியல் மற்றும் பொறியியல் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. இதுவே கடந்த 2018-ல் 1,35,788 கட்டுரைகளாக அதிகரித்துள்ளது. மேலும் இது அறிவியல் மற்றும் பொறியியல் கட்டுரைகளின் மொத்த உலக வெளியீடுகளில் 5.31 சதவீதமாக உள்ளது. 

கடந்த 2018-ல், சீனா 5,28,263 கட்டுரைகளையும், அமெரிக்கா 4,22,808, இந்தியா 1,35,788 கட்டுரைகளையும் வெளியிட்டன.  மேலும், முதல் 10 நாடுகள் கொண்ட பட்டியலில் ஜெர்மனி (1,04,396), ஜப்பான் (98,793), இங்கிலாந்து (97,681), ரஷ்யா (81,579), இத்தாலி (71,240), தென் கொரியா (66,376) மற்றும் பிரான்ஸ் (66,352) ஆகியவை இடம்பெற்றுள்ளன.