science

img

குருதிநாள பாதிப்பால் அவதிப்பட்ட முதியவருக்கு

சென்னை, மே 17-ஆந்திராவை சேர்ந்த 69வயது முதியவருக்கு நவீன அனகோண்டா ஸ்டெண்ட் கிராஃப்ட் முறையை பயன்படுத்தி உயிருக்கு ஆபத்தான பெருந்தமனி குருதிநாள சிதைவு பிரச்சனைக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றப்பட்டுள்ளது.நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரராவ் கொங்காலா என்ற அவர் கடுமையான அடிவயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.  மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் பெருந்தமனி ரத்தநாளம் வெடித்து சிதறும் நிலையில் வீங்கியிருந்தது. பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்றபோதும் பிரச்சனை தீரவில்லை. உடனே சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப் பட்டார். இங்குள்ள 24 மணிநேர பெருந்தமனி குருதிநாள சிகிச்சை பிரிவில் அனகோண்டா ஸ்டெண்டை (மிகப்பெரிய ஸ்டெண்ட்) பயன்படுத்தி வீக்கம் குறைக் கப்பட்டது. உயிருக்கு ஆபத்தான இத்தகைய சிகிச்சையின்போது சாவித் துவார செயல்முறையின் மூலம் சிகிச்சை அளிக்கமுடியும். ஆனால் வழக்கத்திற்கு மாறான ரத்த நாளங்களை கொண்டுள்ள நபர்களுக்கு அம்முறையை பயன்படுத்தமுடியாது என்று ரத்த நாளத்துறையின் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சேகர் நடராஜன் கூறினார்.பெருந்தமனி வீக்கத்திற்கு முற்றிலும் மாறுபட்ட ஸ்டெண்ட் பயன்படுத்தப் படுகின்றன. (பார்க்கபடம்) இவை அனகோண்டா ஸ்டெண்ட் என்று அழைக்கப்படுகின்றன.இந்தியாவில் இத்தகைய ஸ்டெண்ட்டை பயன்படுத்தி செய்யப்பட்ட முதல் அறுவை சிகிச்சை இதுவே என்று இதயவியல் துறையின் முதுநிலை நிபுணரும் குருதிக்குழாய் சிகிச்சைப் பிரிவின் தலைவருமான டாக்டர் ஏ.பி.பாலமுருகன் கூறினார்.புகைபிடித்தல், உயர் ரத்த அழுத்தம் ஆகியவை காரணமாக 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த பாதிப்பு வரலாம்.கடைசி கட்டத்தில் தான் வலிக்கான அறிகுறி தெரியும்.எனவே முதியவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை சாதாரண அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து பார்த்துக்கொள்ளவேண்டும்.இந்தியாவில் பெருந்தமனிக்கு செல்லும் ரத்தக்குழாயில் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிக்சை அளிக்க நாட்டில் 10 மையங்கள் மட்டுமே உள்ளன என்றும் அதில் காவேரி மருத்துவமனையும் ஒன்று என்றும் அவர் தெரிவித்தார்.

;