science

img

முதல் முறையாக வெளியாகிய கருந்துளை புகைப்படம்

உலகில் முதல் முறையாக விண்வெளியில் ஏற்பட்டுள்ள கருந்துளையின் புகைப்படம் வெளியாகி உள்ளது. இது விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லாக கருதப்படுகிறது.


விண்வெளியில் உள்ள ஒரு பிரமாண்டமான பரப்பு கருந்துறை எனப்படும். இந்த கருந்துளை வழியாக ஒளி உள்ளிட்ட எந்த பொருளும் ஊடுருவி செல்ல முடியாது. இந்த பரப்பு துளை என பெயரிடப்பட்டிருந்தாலும் அது காலியான துளையாக இருப்பதில்லை. அந்த சிறிய பகுதிக்குள் பல அடர்த்தியான விஷயங்கள் நிரம்பி உள்ளன.

இந்த கருந்துளையின் ஒரு பகுதியை திரும்பி வர இயலாத புள்ளி (POINY OG NO RETRUN) என அறிவியல் அறிஞர்கள் அழைக்கிறார்கள். அந்த இடத்துக்கு சென்றவர்கள் யாரும் திரும்ப இயலாது. அப்படி செல்பவர்கள் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு சின்னா பின்னம் ஆகி விடுவார்கள். அதே வேளையில் அங்கு ஒரு மனிதன் சென்றால் எவ்வாறு உயிர் இழக்க நேரிடும் என்பது குறித்து எந்த ஒரு விஞ்ஞானியாலும் விவரிக்க இயலவில்லை.

இது குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பு விஞ்ஞானி ஐன்ஸ்டின் கணித்து கூறி உள்ளார். இந்த பிரமாண்டமான பரபான கருந்துளையை ஒரு டெலஸ்கோப் உதவியுடன் படம் பிடிக்க முடியாது என்பதையும் அவர் அப்போதே தெரிவித்திருந்தார். அதற்கு இணங்க ஹார்வர்ட் பேராசிரியர் ஷெபர்ட் டோலமன் தலைமையில் இயங்கிய குழு தொடர்ச்சியான 8 டெலஸ்கோப்புகளை இணைந்து இந்த படத்தை எடுத்துள்ளது.

கடந்த 10 நாட்களாக இம்முயற்சியில் ஈடுபட்டிருந்த 200 விஞ்ஞானிகள் கொண்ட இந்த குழு இந்த கருந்துளையின் புகைபடத்தை வெளியிட்டுள்ளது. இந்த கருந்துளை நமது சூரிய குடும்பத்தின் மொத்த அளவை விட பெரியது என்பது தெரியவந்துள்ளது. அத்துடன் சூரியனை விட 6500 கோடி அளவுக்கு கூடுதல் எடை கொண்டதாகும். சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களின் ஒளியைக் காட்டிலும் கருந்துறை அதிக ஒளி பொருந்தியதாகும். அறிவியல் வட்டாரங்களில் இதுவரை கற்பனையின் அடிப்படையில்( illusion ) படமாகவே காட்டப்பட்ட கருந்துளையின் உண்மையான வடிவம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.


ஆனால், இதில் ஆச்சரியகரமான விஷயம் என்னவென்றால், ஒளியாக இருந்தாலும் கூட கருந்துளைக்கு உள்ளே சென்று விட்டால், வெளியே வர முடியாது என்று கூறப்பட்ட நிலையில், அதே ஒளிதான் கருந்துளையை அடையாளம் காட்டியிருக்கிறது. புகைப்படமாக வெளியிடப்பட்டுள்ள கருந்துளையை சுற்றியிருக்கும் ஒளிவட்டம், உள்ளே இழுக்கப்படும் வாயு, உச்சபட்ச வெப்பத்தில் எரிவதால் ஏற்படும் வெளிச்சம் என்று விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்


;