science

img

36 இணைய சேவை செயற்கைக்கோள்கள் விண்ணில் பாய்கிறது

சென்னை,மார்ச் 22- நம் நாட்டுக்கு தேவையான செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறு வனம் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி,  ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டு கள் மூலம் விண்ணில் நிலை நிறுத்துகிறது. இதில் வணிக ரீதியான செயற்கைக்கோள்கள் பெரும்பாலும் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலமே விண்ணில் ஏவப்பட்டன. பிஎஸ்எல்வி ராக்கெட்டில் அதிகபட்சம் 1,750 கிலோ வரை மட்டுமே செயற்கைக்கோள்களை ஏவ முடியும். ஆனால், ஜிஎஸ் எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம்  4,000 கிலோ வரை செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த முடியும். இதையடுத்து வர்த்தக செயற் கைக்கோள்களை ஜிஎஸ்எல்வி மார்க்-3 (எல்விஎம்-3) ராக்கெட் மூலம் செலுத்தும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது. அதன்படி இங்கிலாந்தை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 72 செயற்கைக்கோள்களை ஜிஎஸ்எல்வி மூலமாக செலுத்து வதற்கு இஸ்ரோவின் என்எஸ்ஐ எல் நிறுவனம் கடந்த ஆண்டு  புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற் கொண்டது. அதில் முதல்கட்டமாக 36  செயற்கைக்கோள்கள் ஜிஎஸ் எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி  வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து 2-வது  கட்டமாக 36 செயற்கைக் கோள்கள் ஜிஎஸ்எல்வி மார்க்-3  ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரி கோட்டாவிலுள்ள 2-வது ஏவுதளத் திலிருந்து மார்ச் 26 அன்று காலை  9 மணிக்கு விண்ணில் செலுத்தப் படவுள்ளது. இதற்கான ஒன்வெப் நிறுவனத் தின் செயற்கைக்கோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு ஏற்கெ னவே வந்து சேர்ந்துவிட்டன. தற்போது ராக்கெட் பாகங்கள் ஒருங்கிணைப்பு உட்பட இறுதிக்கட்ட பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.